Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேலத்தில் அசிங்கமாக சிக்கிட்டாங்க சத்யா.. அதென்ன கையில அரிவாள்மனையா? பக்கத்துலே அவங்கம்மா.. கடவுளே

Subscribe to Oneindia Tamil

சேலம்: தாயை போல பிள்ளை, நூலைப்போல சேலை என்பார்களே, அது சத்தியமான வரிகள் போலும்.. சேலத்தில், தாயும் - மகளும் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டார்கள்.. இந்த சம்பவத்தை பாருங்கள்.

சேலம் அருகே வாகனங்கள் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுநரின் கையை பெண் ஒருவர் அரிவாள்மனையால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Did Salem Sathya attack the Car driver and why did police file case against daughter mother

கார் டிரைவர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது பெத்தநாயக்கன்பாளையம்.. இங்கு வசித்து வருகிறார் ராகுல்.. இவருக்கு 24 வயதாகிறது.. இவர் வாடகை கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்..

பகல் முழுவதும் கார் ஓட்டிவிட்டு இரவு வீடு திரும்பும்போது, தன்னுடைய வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு செல்வது வழக்கம்... அப்படித்தான், நேற்றுமுன்தினமும் வாசலில் காரை நிறுத்திவிட்டு, நேற்று காலையில் கார் எடுப்பதற்காக சென்றுள்ளார்.. அப்போது எதிர்வீட்டுக்காரர் சீனிவாசனின் டூவீலரும், காரின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காருக்கு குறுக்கே டூவீலர் நிறுத்தப்பட்டிருந்ததால், காரை ராகுலால் எடுக்க முடியவில்லை.

வாக்குவாதம்: அதனால், பைக்கை சற்று தள்ளி நிறுத்துமாறு, சீனிவாசனின் மனைவி சத்யாவிடம் ராகுல் கேட்டுள்ளார்.. இது வாய்த்தகராறாக வெடித்துள்ளது. இதனால், ராகுல், சத்யா, சத்யாவின் அம்மா தனலட்சுமி என்கிற அருக்காணி என 3 பேருமே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்... ஒருகட்டத்தில், சத்யா, தனலட்சுமி இருவரும், ராகுலை கெட்ட வார்த்தைகளால் திட்டி, படுமோசமாக சண்டை போட்டதாக தெரிகிறது..

அதிலும் தனலட்சுமி ஆவேசத்தின் உச்சிக்கே போய்விட்டார்.. ஓடிச்சென்று ஒரு கட்டையை எடுத்துவந்து ராகுலின் மண்டையிலேயே ஒரே போடாக போட்டார்.. அப்போதும் ஆத்திரம் அடங்காத சத்யா, பாக்கு அரிவதற்காக வைக்கப்பட்டிருந்த அரிவாள்மணையை எடுத்து வந்து ராகுலின் கையையும் வெட்டிவிட்டார்..

ராகுல்:
இதனால் வலி பொறுக்க முடியாமல் ராகுல் அலறினார்.. ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.. அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, ராகுலை மீட்டு பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி தரப்பட்டு, பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ராகுல் அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து ராகுலுக்கு சிகிச்சை தரப்பட்டு வருகிறது..

இதையடுத்து, ராகுலின் மனைவி கவிதா, ஏத்தாப்பூர் போலீசில் புகார் தந்ததையடுத்து, சத்யா, அவரது அம்மா தனலட்சுமி 2 பேரிடமும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. டூவீலரை தள்ளி நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில், இளைஞரின் கையை, தாயும், மகளும் வெட்டிய சம்பவம் சேலத்தில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+