இந்தியாவில் வேற எந்த தலைவனுக்கும் இந்த நெஞ்சுரம் இல்ல.. உதயநிதி ஸ்டாலின் தைரியசாலி: ஆ.ராசா ஆக்ரோஷம்!
சேலம்: "இந்தியாவில் எந்த அரசியல் தலைவனுக்கும் இல்லாத நெஞ்சுரம் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளது. எத்தனை எதிர்ப்பு வந்தாலும் மண்டியிட மாட்டேன், நான் பெரியாரின் பேரன் என்றார் உதயநிதி" என திமுக எம்.பி ஆ.ராசா, சேலம் மாநாட்டில் உரையாற்றியுள்ளார்.
சேலத்தில் திமுக இளைஞரணியின் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முன்னணி தலைவர்கள் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றி வருகின்றனர். அந்தவகையில், திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா, "திராவிட மாடல் - எல்லோருக்கும் எல்லாம்" என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

ஆ.ராசா பேசுகையில், "அண்ணா தோற்றுவித்த இயக்கத்தில், அவர் 2 ஆண்டுகள் மட்டுமே முதலமைச்சராக இருந்தார். அதன்பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற கருணாநிதி சொன்னர், அண்ணா இருந்த இடத்திலே நான் இருக்கிறேன். அண்ணா வெண்ணெய், நான் சுண்ணாம்பு. என் பக்கத்தில் இருக்கிற நாவலர் வெற்றிலை ஆனால், என் அருகில் இருக்கும் பேராசிரியர் பாக்கு ஆனால், இந்த தமிழ்நாடு சிவப்பதற்கு நல்ல சுண்ணாம்பாக இருப்பேன் என்று தன்னடக்கத்தோடு குறிப்பிட்டார்.
அதன் பிறகு பொறுப்புக்கு வந்த நமது முதல்வர் ஸ்டாலின், "எனக்கு கருணாநிதி போல் பேசத் தெரியாது, கருணாநிதி போல் எழுதத் தெரியாது. ஆனால், அவர் போல உழைக்கத் தெரியும்" என்றார். அதையே மொன்மொழிந்த கருணாநிதி, "ஸ்டாலினிடத்திலே எனக்குப் பிடித்தது உழைப்பு, உழைப்பு, உழப்பு" என்று சொன்னார். அண்ணா நிறுவினார். கருணாநிதி சரித்திரம் படைத்தார். அவர் வழித்தோன்றலாக முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். அதற்குப் பிறகு இந்த இளைஞரணி மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார் அன்பு இளவல் உதயநிதி.
உதயநிதிக்கு 2 தகுதி போதும். ஒன்று, ஒரு தர்மத்தைப் பற்றிப் பேசினார். கடும் எதிர்ப்பு வந்தது. மண்டியிட மாட்டேன். சிலுவை என்றால் சிறை என்றால் தூக்கிச் சுமப்பதற்கு நான் பெரியாரின் பேரன், கருணாநிதி பேரன், ஸ்டாலினின் மகன் என்று சொல்லும் மனப்பக்குவம் போதும்.
அதற்குப் பிறகு, மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டியது தவறு என்று சொல்வதற்கு இந்தியாவில் வேறு எந்தத் தலைவனுக்கும் நெஞ்சுரம் இல்லை, மனவலிமை இல்லை. ஆனால், உச்ச நீதிமன்றத்தைத் தாண்டி, அதனை ஒப்புக்கொள்ள மாட்டேன் எனச் சொல்கிற ஆற்றல் காரணமாக, உதயநிதியை அண்ணாவாகப் பார்க்கிறேன், கலைஞராகப் பார்க்கிறேன், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகப் பார்க்கிறேன்.
பெரியாருக்கு மட்டும் தான் அந்த ஆற்றல் இருந்தது. தண்டனை பெற்றார் பெரியார். உங்களுக்கு எவ்வளவு தண்டனை வேண்டும் என்று கேட்டார்கள். எவ்வளவு தண்டனை கொடுத்தால் உங்களுக்கு மன நிறைவு கிடைக்குமோ அவ்வளவு கொடுங்கள் என்றார். இன்றைக்கு கொள்கை ரீதியாக பயணிக்கும் உதயநிதிக்கு இந்த நாட்டை ஆள வேறு என்ன தகுதி வேண்டும்?" என ஆக்ரோஷமாகப் பேசினார் ஆ.ராசா.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications