அண்ணாமலைக்கு எதிராக கறுப்பு கொடியா? எதுக்கு இந்த பொய் புகார்? சுயவிளம்பரம்?: தி.வி.க. கடும் கண்டனம்
சேலம்: சேலம் வருகை தரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக தமது இயக்கம் கறுப்புக் கொடி காட்டப் போவதாக பொய்யாக புகார் கூறி பாஜகவினர் சுயவிளம்பரம் தேடுவதாக கொளத்தூர் தா.செ.மணி தலைமையிலான திராவிடர் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சேலம் ஏற்காட்டில் நாளை நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்த நிலையில் திராவிடர் விடுதலை கழகத்தின் சேலம் மாவட்டம் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சேலம் மாவட்ட திராவிடர் விடுதலை கழகத்தின் அறிக்கை விவரம்: ஏற்காட்டிற்கு நாளை ( தனியார் ஓட்டல் திறப்பு விழாவிற்காக) பாஜகவின் அண்ணாமலை அவர்கள் வருகையையொட்டி சுய விளம்பரத்துக்காக, ஒரு பரபரப்பை செயற்கையாக ஏற்படுத்த பாஜக கும்பல் சதி செய்கிறது.
திராவிடர் விடுதலைக் கழகமும், தோழமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு கொடி காட்ட திட்டமிட்டுள்ளதாக சேலம் மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்திற்கு அவர்களே பொய்யானதொரு தகவலை தெரிவித்து பாதுகாப்பை பலப்படுத்தவும், செயற்கையாக ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விளம்பரம் தேடவும் திட்டமிட்டுள்ளனர்.
நாங்கள் அவருக்கு கருப்பு கொடி காட்டுவதற்கான அவசியமோ, தேவையோ தற்போதைய சூழலில் இல்லை. ஆகவே இவர்கள் பரப்பும் செய்தி முற்றிலும் தவறானது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு சேலம் மாவட்ட திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.
-
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
அங்குட்டு போய் விளையாடுங்கப்பா.. அண்ணாமலை இயக்கம் ஆரம்பித்த அதே நாள்! குறுக்கே வந்த லதா ரஜினிகாந்த் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா?












Click it and Unblock the Notifications