அதிகரிக்கும் சசிகலா ஆதரவுக் குரல்.. கவலையில் எடப்பாடி?.. சேலத்தில் பரபரக்கும் ஆலோசனை!
சேலம்: சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து மிகப்பெரிய அளவில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக சேலம் நெடுஞ்சாலை நகரில் தங்கியுள்ள இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, தங்கமணி உள்ளிட்ட ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
நேற்றைய தினம் ஓ பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜா, வி.கே. சசிகலாவை திருச்செந்தூரில் சந்தித்தார். இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

எடப்பாடி பழனிச்சாமி
தொடர்ந்து இன்று காலை முதல் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. தற்போது கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழிதேவன், பாண்டியன், மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் வந்து சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

கருப்பண்ணன்
நேற்று இரவு முன்னாள் அமைச்சர் கருப்பண்ணன் உள்ளிட்ட அதிமுகவின் எடப்பாடியின் ஆதரவாளர்கள் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து அவரது இல்லத்திற்கு அதிமுகவினர் வருகை புரிந்து வருகின்றனர்.

தொண்டர்களின் கருத்து
தொண்டர்களின் கருத்துகளையும் தொடர்ந்து கேட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சசிகலாவை சந்தித்துவிட்டு வந்த ஓ ராஜாவை ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்து கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். தேனி மாவட்ட அதிமுகவினர், முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, ஓபிஎஸ் சகோதரர் ஓ ராஜா உள்ளிட்டோர் சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

என்ன முடிவு
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அது போல் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்றைய தினம் இரண்டாவது நாளாக ஓபிஎஸ்ஸை சந்தித்து பேசினார். இதனால் சசிகலா விவகாரத்தில் இரு தரப்பினரும் என்ன மாதிரியான முடிவை எடுக்க போகிறார்கள் என தெரியவில்லை.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச்












Click it and Unblock the Notifications