Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட் தேர்வு: இப்படி அவசரப்பட்டுட்டாரே.. மாணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிச்சாமி

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் நீட் தேர்வுக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலுக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கூழையூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் (19). இவர் ஏற்கெனவே இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், இந்த ஆண்டும் நீட் தேர்வு எழுத ஆயத்தமாகி வந்தார்.

இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை இன்று எழுத இருந்த தனுஷ் தேர்வு அச்சத்தால் இன்று அதிகாலை தனது வீட்டின் முற்றத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீட் தேர்வு

நீட் தேர்வு


ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் இந்த முறையும் தோல்வி அடைந்து விடுவோமோ என்கிற அச்சத்தில் தனுஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தேர்வு பயத்தில் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஞ்சலி

அஞ்சலி

இந்த நிலையில் தற்கொலை செய்துகொண்ட மாணவரின் உடலுக்கு முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது மாணவர் தனுஷின் பெற்றோர் எடப்பாடி பழனிச்சாமியின் கைகளை பிடித்து கொண்டு கதறி அழுதனர்.

ஆறுதல் தெரிவித்த முன்னாள் முதல்வர்

ஆறுதல் தெரிவித்த முன்னாள் முதல்வர்

இதையடுத்து பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்தார். அப்போது மாணவரின் தந்தையிடம் தங்கள் மகன் அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்து விட்டார். தைரியமாக தேர்வை எழுதி இருக்கலாம் என்றார். அது போல் மாணவர்கள் இது போன்ற முடிவை எடுக்க வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆழ்ந்த இரங்கல்

ஆழ்ந்த இரங்கல்

இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்
நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய அரசு அலட்சியம்

மத்திய அரசு அலட்சியம்

இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு கிராமப்புற, நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களைப் புரிந்து கொள்ளாத மத்திய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ-மாணவிகள் தற்கொலைக்கு காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது.

எதிர்காலம் உண்டு

எதிர்காலம் உண்டு

மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்துத்தரும் பெரும் பொறுப்பும், கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து, நீட் தேர்வை மத்திய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே, மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகோள் விடுகிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு

மத்திய அரசு

மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்து கொள்ளும் அளவிற்கு கடினமாக உள்ள இந்த நீட் தேர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மாணவர்களும் மனதை தளர விடாமல் உயிரை மாய்த்து கொள்ளாமல் தேர்வை சந்திக்க வேண்டும். நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான கவுன்சிலிங்கை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+