Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூரஜ் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்காத விஜய்! நிதியுதவி தரும் வரை உடலை வாங்க மாட்டோம்- குடும்பத்தினர்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட போது வெயிலின் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த வடமாநில தொழிலாளி சூரஜ்ஜின் குடும்பத்திற்கு விஜய் நிதியுதவி அளிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவரது குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க 11 சட்டசபை தொகுதிகளில் இருந்து 5 ஆயிரம் நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

suraj salem vijay

இந்த நிலையில் தவெக நிர்வாகிகள் மத்தியில் பிரச்சார வேனில் விஜய் பேசினார். இந்த நிகழ்ச்சியில் வெயிலின் தாக்கத்தால் சூரஜ் என்ற இளைஞர் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு அங்கிருந்த மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

எனினும் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருந்ததால் உடனடியாக அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அவர் யார் என்பதை விசாரித்தனர். அப்போது அவர் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அவர் சேலத்தில் 20 ஆண்டுகளாக தங்கியிருந்து வெள்ளி பட்டறையில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார் என்றும் தெரியவந்தது.

சூரஜ்ஜிற்கு 32 வயதில் பிரியங்கா என்ற மனைவியும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் சூரஜ்ஜின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்து முடிந்தது.

இந்த நிலையில் சூரஜ்ஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்கக் கூட தவெகவினர் வரவில்லை என்ற அதிர்ச்சி சம்பவம் கிடைத்துள்ளது. நேற்று முதல் இன்று வரை இதுவரை யாரும் வராததால் சேலம் அரசு மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் உள்ளனர்.

அவர்கள் கூறுகையில், "சூரஜ் கூலி தொழிலாளி. அவர்தான் அந்த குடும்பத்திற்கு வருமானத்தை கொடுத்து வந்தார். தற்போது அவரது இறப்பால் அந்த குடும்பமே பரிதவித்து வருகிறது. எனவே சூரஜ்ஜின் குடும்பத்திற்கு விஜய் நிதியுதவி செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம். தவெக சார்பில் இதுவரை ஒருவர் கூட வந்து ஆறுதல் தெரிவிக்கவில்லை" என தெரிவித்தனர்.

தனது பொதுக் கூட்டத்திற்கு வந்து இறந்த சூரஜ்ஜின் இறப்பிற்கு விஜய் இரங்கல் தெரிவித்து ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை என்று நண்பர்களும் உறவினர்களும் ஆதங்கப்படுகிறார்கள். மேலும் சூரஜ்ஜுக்கு ஏற்கெனவே இதய பிரச்சினை இருந்ததாக தவெகவினர் கூறி வருகிறார்கள். ஆனால் அவருக்கு அது போன்று எந்த பிரச்சினையும் இல்லை என நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று (நேற்று) தவெக சார்பில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தைக் காண வந்த சூரஜ் என்ற இளைஞர் திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி உள்ளார் அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யபட்டு கழக நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது.

இளைஞர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேம். இவ்வாறு நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான போது மருத்துவமனையில் அனைத்து கட்சியின் நிர்வாகிகளும் இருந்தனர்.

இவ்வளவு ஏன் முதல்வர் ஸ்டாலினே இரவோடு இரவாக கரூர் சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆனால் இந்த உயிரிழப்புக்கு ஒரு விதத்தில் காரணமான விஜய்யோ அவரது கட்சி நிர்வாகிகளோ ஒருவர் கூட மருத்துவமனைக்கு வரவில்லை. விஜய் 72 நாட்கள் வரை தனது பனையூர் இல்லம், பட்டினம்பாக்கம் இல்லம் என மாறி மாறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+