Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இறந்த தந்தையின் உடலை மாற்றிய அதிகாரிகள்.. சேலத்தில் நீதிபதியிடம் ஓடிய மகன்.. என்னாது ரூ.30 லட்சமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இறந்த தந்தையின் உடலை கேட்டு, மகன் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையில், முக்கிய உத்தரவினை சேலம் நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது. இதுகுறித்த வழக்கில் போலீஸ் தரப்பு என்ன பதிலளிக்க போகிறதோ? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

திருவாரூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.. இவர் காரைக்காலில் தங்கி தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார்... இந்நிலையில், கடந்த மாதம் இவர் இறந்துவிட்டதாக, அவரது குடும்பத்துக்கு போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

court father son

அதையடுத்து ராஜேந்திரனின் உடலை பெறுவதற்காக அவரது குடும்பத்தினர் காரைக்கால் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போதுதான், ராஜேந்திரனின் உடலுக்குப் பதிலாக வேறு ஒருவரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் வழங்கியுள்ளது தெரியவந்தது.

நஷ்டஈடு: இதனால், தன்னுடைய தந்தையின் உடலை தங்களிடம் ஒப்படைக்கக் கோரியும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்க உத்தரவிடக் கோரியும் ராஜேந்திரனின் மகன் ராஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ராஜி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,"என்னுடைய தந்தை ராஜேந்திரன்; காரைக்காலில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறை வீட்டுக்கு வருவார். கடைசியாக, என் தந்தையை ஜூன் மாதம் திருநள்ளாறில் பார்த்தேன். அவருக்கு மொபைல் போன் பயன்படுத்த தெரியாது. கடந்த 14ம் தேதி, காரைக்கால் சிறப்பு எஸ்.ஐ., ராஜேந்திரன், என் வீட்டுக்கு வந்து புகைப்படம் ஒன்றை காண்பித்து, ஜூலை 22ல் தந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.

வேறொரு சடலம்: மறுநாள் தந்தையின் உடலை பெற குடும்பத்தினருடன், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, தந்தையின் உடலுக்கு பதிலாக வேறொருவரின் உடலை காட்டினர். தந்தையின் உடலை வேறொரு குடும்பத்திடம் வழங்கியது தெரியவந்தது.

காரைக்கால் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம், கவனக்குறைவால் இச்சம்பவம் நடந்துள்ளது. தந்தையின் உடலை பெற்ற வேறொரு குடும்பத்தினர், 15 நாட்களுக்கு முன் இறுதி சடங்குகள் முடித்தது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில், இதுபோல பல சம்பவங்கள் நடந்துள்ளன. அதிகாரிகளின் இந்த செயல்பாடு, தந்தை இறப்பில் சந்தேகத்தை உருவாக்குகிறது. இயற்கை மரணம் போல தெரியவில்லை.

அலட்சியம்: அலட்சியம் மற்றும் பணியில் கவனக்குறைவாக செயல்பட்ட போலீஸ், மருத்துவமனை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கையை, காரைக்கால் கலெக்டர் உள்ளிட்டோர் எடுக்க வேண்டும். டி.என்.ஏ., உள்ளிட்ட அறிவியல்பூர்வ சோதனையை நடத்தி, என் தந்தையின் உடலை ஒப்படைப்பதோடு, குடும்பத்துக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்" என்று மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, காரைக்கால் போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இறந்த ராஜேந்திரனின் உடலை தவறுதலாக ஒரு மாதத்துக்கு முன்பாக சேலத்தை சேர்ந்த குடும்பத்திடம் மாற்றி ஒப்படைத்து விட்டதாகவும், அவர்களும் ராஜேந்திரன் உடலை அடக்கம் செய்து விட்டதாகவும், அந்த உடலை தோண்டியெடுத்து மீண்டும் மனுதாரர் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தந்தை உடல்: இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.. இதனால், உயிரிழந்த தந்தையின் உடல் மகனிடம் ஒப்படைக்கப்படுமா? குடும்பத்துக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படுமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு இந்த வழக்கில் ஏற்பட்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+