Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு.. காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சேலம்: மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, அணையின் நீர்மட்டம் அதிகரித்திருக்கிறது. எனவே அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 35,0000 கனஅடியில் இருந்து, 45,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. நீரின் அளவு அதிகரிக்கப்பட்டிருப்பதால், காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

நேற்று முன்தினம் தொடங்கி சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக ஏற்காடு மலைப்பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

Cauvery River flood Mettur Dam

சேலம் மாவட்டம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மேட்டூர் அணை தற்போது முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியிருக்கிறது. எனவே அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்று மதியம் நீர் திறப்பு விநாடிக்கு 35,000 கன அடியாக இருந்த நிலையில், தற்போது 45,000 கனஅடியாக அதிகரித்திருக்கிறது. இது 60,000 கனஅடியாக எட்டும் என்று சொல்லப்படுகிறது.

மேட்டூரிலிருந்து திறக்கப்படும் நீர் சுமார் 11 மாவட்டங்கள் வழியாக பயணிக்கிறது. எனவே அனைத்து மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக மேட்டூர் அணையின் நீர் பயணிக்கிறது. மேட்டூரில் இருந்து திறந்துவிடப்படும் நீர் அதிகரிப்பதால், முதலைகள் அடித்துவரப்படலாம் என்றும், எனவே குளிக்கவோ, துணி துவைக்கவோ ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

முன்னதாக ஏற்காடு மலைப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் அக்.24ம் தேதி வரை சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் வர தடை விதிக்கப்பட்டிருக்கின்றன.

இது குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக அதிகளவிலான மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதைகள் வழியாக ஆங்காங்கே தண்ணீர் வழிந்தோடுகிறது.

எனவே, வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாலும், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான மலை சாலையில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகன போக்குவரத்திற்கும் சேலத்தில் இருந்து குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகன போக்குவரத்திற்கும் இன்று 22.10.2025 மாலை 7 மணி முதல் 24.10.2025 வரை தற்காலிகமாகத் தடை செய்யப்படுகிறது.

ஏற்காடு மலைப்பகுதிகளில் அதிகளவிலான மழைப்பொழிவு இருப்பதாலும், சாலைகளில் ஆங்காங்கே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாலும் சுற்றுலாப் பயணிகள் 24.10.2025 வரை ஏற்காடு வருவதை முற்றிலும் தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பினை நல்கிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சேலம் மேட்டூர் அணையை தவிர, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையும் நிரம்பியிருக்கிறது. எனவே அணையில் இருந்து அதிக அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே, தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த ஆற்றில் நீர் வரத்து அதிகரிக்கப்பட்டிருப்பதால் சிறிய அணைகளும் நிரம்பியுள்ளன. எனவே அணையிலிருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தருமபுரியிலும் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆற்றில் நீர் வரத்து 50,000 கன அடியாக இருப்பதால் பரிசல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+