கவர்ச்சி+ நிர்வாண போட்டோஷூட்.. டச் டூ கிஸ் வரை தாய்களிடமே அனுமதி கேட்கும் இயக்குநர்.. பகீர் ஆடியோ
சேலம்: சினிமா இயக்குநர் என சொல்லி 300-க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காமுகனை போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடியை சேர்ந்தவர் வேல் சத்ரியன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு "நோ" என்ற பெயரில் புதிய திரைப்படம் எடுப்பதாக விளம்பரம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து அந்த படத்தில் நடிப்பதற்கான நடிகர், நடிகைகளை தேர்வு செய்யவும் ஆடிஷன் நடத்தி வந்தார். சினிமாவில் ஒரு சீனிலாவது நடித்து விட வேண்டும் என சினிமா வாய்ப்பை தேடும் பெண்களை தன் வலையில் விழவைத்தார் சத்ரியன்.

தேசிய விருது
நோ எனும் படம் தேசிய விருதுக்கான படம் என்றும் அதில் நடித்தால் விருது கிடைக்கும் என்றும் இளம்பெண்களிடம் சத்ரியன் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண்களின் பெற்றோரிடமும் சத்ரியன் பேசியுள்ளார். இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் ஆடிஷனுக்கு என அழைத்து சென்ற சத்ரியன், அந்த பெண்களை கவர்ச்சியாக நிற்க வைத்து போட்டோஷூட் நடத்தியதாக தெரிகிறது.

ஆடைகள்
இதையடுத்து அவர்களை ஆடைகளை அவிழ்க்க சொல்லியும் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. நிர்வாணமாக எப்படி போஸ் கொடுப்பது என்பதை சொல்லித் தருவதாக நெருங்கிய சத்ரியன் அந்த பெண்களுடன் உல்லாசமாகவும் இருந்துள்ளார். இதை வீடியோ எடுத்து அவ்வப்போது மிரட்டி மிரட்டியே பலாத்காரம் செய்துள்ளார்.

சத்ரியன்
இது போல் சத்ரியனிடம் 300- க்கும் மேற்பட்ட பெண்கள் ஏமாந்து போயுள்ளனர். இவ்வாறு சத்ரியனிடம் சினிமா வாய்ப்பு கேட்டு வந்த பெண்ணை ஆபாச படத்தில் நடிக்க வைக்க முயற்சித்ததை அடுத்து அந்த பெண்தான் போலீஸாரிடம் சத்ரியனை சிக்க வைத்துள்ளார்.

வேல் சத்ரியன்
இதையடுத்து வேல் சத்ரியனின் அலுவலகத்தில் சோதனை நடத்திய போது ஆணுறைகள், லேப்டாப்கள் , பென் டிரைவ்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸார் பறிமுதல் செய்த ஹார்டுடிஸ்குகளில் 300- க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் இருந்ததை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

வேல் சத்ரியன் ஆடியோ
விசாரணையில் அந்த பெண்களின் தாயிடமும் வேல் சத்ரியன் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் கூறுகையில் சினிமா என்றால் தப்போ, ரைட்டோ எல்லாமே நடக்கத்தான் செய்யும். நான் உங்கள் மகளை நடிகையாக்குவேன். சினிமாவில் சரி தவறு அனைத்தும் நடக்கத்தான் செய்யும். நான் அவரை டச் செய்வேன், கிஸ் செய்வேன், இதில் பிரச்சினை வரக் கூடாது. உங்கள் மகளிடம் கேட்டுவிட்டேன், அவர் ஓகே சொல்லி விட்டார். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? எனக்கு உன் மகளிடம் தப்பு செய்ய வாய்ப்பு கிடைத்தும் நான் செய்யவில்லை. அவளாக என்னை நெருங்கிய போது கூட "கொன்னுடுவேன், ஒழுங்கா வந்த வேலையை பாரு" என திட்டினேன். இப்போது ஓபனாக கேட்கிறேன். உன் மகளை நான் ரெடி செய்யட்டுமா வேண்டாமா என சத்ரியன் பேசும் ஆடியோ வெளியானது.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications