"எடப்பாடியின் சுயநலம்.." இனி அதிமுக ஒருங்கிணைப்பிற்கு சாத்தியமே இல்லை.. ஆவேசமான பெங்களூர் புகழேந்தி
சேலம்: அதிமுகவை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி அதிமுக ஒருங்கிணைப்பாளர் குழு முயன்று வந்தது. இதற்கிடையே இனிமேல் அதிமுகவில் ஒருங்கிணைப்பு என்பதே சாத்தியம் இல்லை என கூறிய புகழேந்தி, அதிமுக தலைவர்களைக் கடுமையாக விமர்சித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் புகழேந்தி மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
அதிமுகவில் இருந்த முக்கிய தலைவர்களாக ஓபிஎஸ், தினகரன், சசிகலா உள்ளிட்டோர் இப்போது தனித்து இயங்கி வருகிறார்கள். இதற்கிடையே பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒருங்கிணைப்பதாகச் சொல்லி புகழேந்தி உள்ளிட்டோர் முயன்றார். இதற்குத் தேவையான முயற்சிகளையும் எடுத்தனர். இதற்கிடையே அதிமுகவில் ஒருங்கிணைப்பு என்பதே சாத்தியமில்லை என்று புகழேந்தி கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஒருங்கிணைப்பிற்குச் சாத்தியம் இல்லை
இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவில் ஒருங்கிணைப்பு என்பது இனிமேல் நடக்காது. நான் தெளிவாகவும் ஓபனாகவும் சொல்லிக் கொள்கிறேன். ஒருங்கிணைப்பு இனிமேல் சாத்தியமில்லை. ஒருங்கிணைப்பிற்கு எடப்பாடி ஏற்றுக்கொள்வதாக இல்லை. நான் இந்தக் கட்சியை வேண்டுமானாலும் அடமானம் வைத்துவிடுகிறேன். பிறகு விற்கக் கூடச் செய்வேன். ஆனால், ஓபிஎஸ் சசிகலா, புகழேந்தி உள்ளிட்டோரைச் சேர்க்கப் போவதில்லை என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். இதுதான் இப்போது நிலைமை.
நான் கேசிடி பிரபாகரன் உள்ளிட்டோர் கட்சியை ஒருங்கிணைக்க எங்களால் முடிந்தவரை முயன்றோம். ஆனால், அது வீணானது. பல கோடி தொண்டர்கள் அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்றே விரும்பினர். இதற்கு நாங்கள் முடிந்தவரை செய்தோம். பல அவமானங்களைத் தாங்கிக் கொண்டோம்.
எடப்பாடி தீய சக்தி
எடப்பாடி என்ற தீய சக்தியால் கட்சி ஒருங்கிணைப்பு என்பது நடைபெறாமல் போனது. நானும் அவரிடம் ஏமாந்து போனேன். முதலில் கூட்டணி குறித்துத் தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பு பேசிக் கொள்ளலாம் என்ற அமித் ஷா ஏன் இப்போது திடீரெனக் கூட்டணி குறித்து அறிவித்தார் என்ற சந்தேகம் பலருக்கும் வரும். அமித் ஷாவுக்கு எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டு பாஜக தனித்துப் போட்டியிட்டது. அப்போது அமித் ஷா சில இடங்களில் வந்து பிரச்சாரம் செய்தார். அப்போது தமிழகத்திற்குப் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்த அதிமுகவை ஊழல் ஆட்சி என்றார். எல்லா இடங்களிலும் அதிமுகவை ஊழல் ஆட்சி என்றார். இப்போது மட்டும் ஊழல் ஆட்சி நல்லாட்சியாக மாறிவிட்டது. எடப்பாடி உள்ளிட்டோர் மீதான ஊழல் கேஸ் எல்லாம் சரியாகிவிட்டதா.. உண்மையில் இந்தக் கூட்டணி மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. யாரும் இந்தக் கூட்டணியை ஏற்கவில்லை" என்றார்.

தாக்கு
தொடர்ந்து டிடிவி தினகரனை மறைமுகமாக விமர்சித்த புகழேந்தி, "நான் ஒருவரைத் தலைவர் எனச் சொல்லி எனது 2 ஆண்டுகளை வீணடித்தேன். அவருக்காக நான் திகார் சிறை முதல் சென்னை வரை அலைந்தேன். பரப்பன அக்ரஹாரா சிறையில் வைத்து இனி சாகும் வரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றார். இன்று அவரே பாஜக உடன் கூட்டணி இல்லை என்றால் அதிமுக அழிந்துவிடும் என்று அவரே சொல்கிறார்.
அந்தத் தலைவர் வீட்டிற்குத் தான் அன்று ஓபிஎஸ் சென்றார். அங்குச் சென்ற சில நாட்களிலேயே ஓபிஎஸ் காலியானார். அடுத்து அண்ணாமலையும் அங்குச் சென்றார். இப்போது அவரும் காலி ஆகிவிட்டார்.
எடப்பாடி பழனிசாமி
நான் கேட்பது ஒன்று தான். எடப்பாடி பழனிசாமியை ஜெயலலிதா முதல்வராக்கினாரா! இல்லை.. ஜெயலலிதா இருந்த வரை எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் தரப்பட்டதா! இல்லை.. எல்லா அமைச்சர்களில் அவரும் ஒருவர் என்ற ரேஞ்சிலேயே இருந்தார். ஓபிஎஸை தான் 2 முறை ஜெயலலிதா முதல்வராக்கினார். 10 முறை பட்ஜெட்டை சமர்ப்பித்ததும் அவர் தான். அதிமுக பொருளாளராகவும் இருந்தார். ஜெயலலிதா தினசரி அழைத்துப் பேசும் நபராக ஓபிஎஸ் இருந்தார்.

ஓபிஎஸ்
இப்போது என்னாச்சு உங்களுக்கு! மானம் மரியாதையை விட்டு அரசியல் செய்ய வேண்டுமா! இவ்வளவு கேவலமாகக் கீழே இறங்கிப் போய்விட்டார். தன்மானமும் சுயமரியாதையும் தான் முக்கியம். எவ்வளவு அவமானம் அசிங்கத்தைத் தாங்க முடியும். ஒரு தேர்தலிலும் நிற்பதில்லை. ஒரு பொதுக்கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டம் என எதையும் நடத்துவது இல்லை. உங்களை நம்பி இருப்போர் கதி என்ன. அவர் அப்படி இருக்கிறார்.
சசிகலா
இன்னொரு அம்மா வீட்டில் இருந்து வெளியிலேயே வருவதில்லை. அவர் இன்னும் ஜெயலலிதாவுக்கு பிறகு தான் என நினைத்துக் கொண்டு இருக்கிறார். நான் கட்சியைச் சேர்த்து வைத்துவிடுவேன். 2026ல் ஜெயலலிதா ஆட்சி வந்துவிடும் என சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிடுவார். 2026 முடிந்த பிறகு 2031 வரை இதை வசனத்தை மாற்றி பேசுவார். நீங்கள் இதுவரை என்ன செய்து இருக்கிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்.
நாங்களாவது கட்சியைச் சேர்த்து வைக்க முயன்றோம். யாரும் ஒத்துவரவில்லை. நீங்கள் என்ன செய்தீர்கள். பாஜக உடனான கூட்டணி குறித்துக் கேட்டால் திருடன் நல்லவனாக மாறிவிட்டால் ஏற்க மாட்டீர்களா என்கிறார் பொன்னையன். மும்மொழிக் கொள்கை குறித்தும் பேசுவதில்லை. இது கேவலமாக இல்லை.

வாழ்க்கையே போய்விடும்
எடப்பாடி பழனிசாமி அமலாக்கத் துறை, வருமான வரித்துறைக்குப் பயந்தே அங்கு இருக்கிறார். இதை நான் மட்டும் சொல்லவில்லை. உலகமே அப்படித் தான் பேசிக் கொள்கிறது. அது அனைவருக்கும் தெரியும். அதிமுகவில் இருப்போரிடம் நான் கையெடுத்துக் கேட்டுக் கொள்கிறேன். இனி எடப்பாடி பழனிசாமியுடன் இருந்தால் உங்கள் வாழ்க்கையே போய்விடும்.
எதிரியான திமுகவை எதிர்க்கும் சக்தியை அதிமுக நாளுக்கு நாள் இழந்துவருகிறது. போய்ஸ் தோட்டத்து வாசலில் வந்து காத்திருந்தவர்கள். இன்று நமது கழுத்தைப் பிடிக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமியை அருகில் வைத்துக் கொண்டே 2026்ல் என்டிஏ ஆட்சி அமையும் என்கிறார் அமித் ஷா. அவர் பாஜகவை சேர்ந்தவர் அப்படிச் சொல்கிறார். அதிமுகவினர் ஏன் இதற்கு எதுவும் சொல்லவில்லை. தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அதிமுக ஆட்சி அமையும் என்று தானே சொல்ல வேண்டும்.
அதிமுகவுக்கு செய்த துரோகம்
கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடும்போது தேவையான இடங்களில் வெல்ல முடியாமல் போனால் யாரும் சீண்ட மாட்டார்கள். அதுவே அமித் ஷாவின் ராஜதந்திரம். எடப்பாடி எடுத்த முடிவு என்பது அதிமுகவுக்கு செய்த துரோகம். இத்தனை காலம் கூட்டணி இல்லை இல்லை எனச் சொல்லிவிட்டுத் திடீரென கூட்டணி அமைத்தால் அதை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? பலரும் கூட்டணிக்கு எதிராகவே இருக்கிறார்கள். நாங்களும் கூட்டணி எதிராக மாநிலம் முழுக்க போய் பிரச்சாரம் செய்வோம்" என்று அவர் ஆவேசமாக விமர்சித்தார்.
-
மொத்தம் 23 வேட்பாளர்கள்.. இந்த 3 பேரை கவனிச்சிங்களா! அதிமுகவில் தொகுதி மாறியவர்கள்! காரணம் இதுதான்! -
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
கிங்-கும் இல்லை.. கிங் மேக்கரும் இல்லை.. விஜய் ‘ஜஸ்ட்’ ஒரு சத்தமா? ஸ்டாலின் ‘ரிப்பீட்’.. தவெக ஷாக் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications