இதுக்குதானே ஆசைப்பட்டாய்.. நன்றாக பார்.. மனைவியின் கள்ளக்காதலால் குழந்தைகளை கொன்று கணவர் தற்கொலை
சேலம்: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மனைவியின் கள்ளக்காதலால் விரக்தியடைந்த கணவன் தனது இரண்டு குழந்தைகளையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம், மங்கலப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகன் (33). சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே செயல்பட்டு வரும் தாபா ஹோட்டலில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார்.
இவர் தாபாவிற்கு அருகிலேயே உள்ள பணியாளர்கள் குடியிருப்பில் மனைவி முருகேஸ்வரி (27), மகன் சீனிவாசன் (9), மகள் கிருஷ்ணபிரியா (5) ஆகியோருடன் குடியிருந்து வந்தார்.

முருகனின் காலில் சுடுநீர்
கடந்த 10 நாட்களுக்கு முன்பு பணியின் போது முருகனின் காலில் சுடுநீர் பட்டதால் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்துள்ளார். அப்போது மனைவி முருகேஸ்வரி சந்தேகப்படும் வகையில் அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசி வந்ததை அறிந்தார். இதை முருகன் பல முறை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

விரக்தி
ஆனால் முருகேஸ்வரி கேட்ட பாடில்லை. இதனால் விரக்தி அடைந்த முருகன், நேற்று முன் தினம் மாலை தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு மனைவியின் செல்போனையும் எடுத்துக் கொண்டு சென்ற அவர் நேற்று முன் தினம் இரவு இரண்டு குழந்தைகளும் இறந்த நிலையில் ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார்.

அழுது கொண்டே பேசிய முருகன்
அதில் முருகன் அழுது கொண்டே "இதற்கு தானே ஆசைப்பட்டீங்க, எங்களை கொல்லனும்னு முடிவு பண்ணிட்டீங்க, கொன்னுட்டீங்க இந்தா பார்த்துக்கோங்க" என்று கூறி தனது உறவினர்களுக்கெல்லாம் வாட்ஸ் ஆப்பில் அனுப்பிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

தீவிர விசாரணை
இதுகுறித்து மனைவி மற்றும் அவரது உறவினர்கள் சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது நேற்று மாலை சங்ககிரி ஆர்டிஓ அலுவலகம் எதிரில் ஒரு திருமண மண்டபத்தின் பின்புறமுள்ள மாந்தோப்பில் முருகன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் தூக்கிலிட்டபடி சடலமாக கிடந்தனர்.

அரசு மருத்துவமனை
இதையடுத்து உடல்களை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தினால் கணவன் இரண்டு குழந்தைகளையும் கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட இச்சம்பவம் சங்ககிரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீரழியும் குடும்பங்கள்
கணவனோ மனைவியோ திருமணத்திற்கு மீறிய உறவால் ஒருவர் கொல்லப்படுவதும், இன்னொருவர் சிறைக்கு செல்வதும், விரக்தியில் பாதிக்கப்பட்டவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த சம்பவத்தால் இன்னமும் வாழ்க்கையே தொடங்காத குழந்தைகள்தான் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை இவர்கள் உணருவதாக தெரியவில்லை. குன்றத்தூர் அபிராமி தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக தனது பிள்ளைகளை கொன்றார். அது போல் குழந்தைகளை டார்ச்சர் செய்யும் சம்பவங்களையும் அண்மை செய்திகளில் பார்த்துள்ளோம். ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம் என உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்தியும் கள்ளக்காதலால் தினம் தினம் ஒரு குடும்பமாவது சீரழிந்து வருகிறது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications