3 கணவன்கள்.. 2 கள்ளக்காதலன்கள்.. 4வது திருமணத்துக்கு ரெடியான இளம்பெண்.. கொலையில் முடிந்த கொடுமை
பெண்ணை திருமணம் செய்வது தொடர்பான மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார்
சேலம்: கள்ளக்காதலியை யார் திருமணம் செய்வது என்ற போட்டி, தகராறாக வெடித்து கொலையில் முடிந்துள்ளது.. இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது.
சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்தவர் கலைமணி.. 23 வயதாகிறது.. திருமணமானவர்... அதே பகுதியை சேர்ந்தவர்கள் கலையரசன் மற்றும் கிருபைராஜ். இவர்கள் 2 பேருக்குமே 23 வயதாகிறது.
கிருபைராஜ் தறி தொழிலாளி.. இவருக்கும் கலைமணிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.. கள்ளக்காதலி கலைமணியை சந்திக்க செல்லும்போது கிருபைராஜ், தன்னுடைய நண்பர் கலையரசனையும் கூடவே அழைத்து செல்வார்..

கூடாநட்பு
அப்படி செல்லும்போது, கலையரசனுக்கும் கலைமணிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. 2 பேருடன் ஒரே நேரத்தில் கள்ளத்தொடர்பில் இருந்ததை கலைமணி ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் பார்த்து கொண்டார்.. இதனிடையே, கிருபைராஜுயுடன் கள்ளக்காதலில் இருந்தது கலையரசனுக்கு ஒருகட்டத்தில் தெரியவந்தது... இதனால் நண்பர்களுக்குள் தகராறு வெடித்தது.

திருமணம்
கலைமணியை திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுகிறேன், திருமணத்துக்கான ஏற்பாட்டையும் செய்து வருவதால் ஒத்துழைப்பு தருமாறு கிருபைராஜ் நண்பரிடம் கேட்டுள்ளார்.. ஆனால் இதற்கு கலையரசன் மறுப்பு தெரிவித்து, நான்தான் கலைமணியை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்..

பேச்சுவார்த்தை
ஒரு கட்டத்தில் கள்ளக்காதலியை விட்டுக்கொடுக்க கலையரசன் முடிவு செய்தார்... இதையடுத்து "கலைமணியை நீயே வைத்துக்கொள்" என்று கிருபைராஜியிடம் தெரிவித்திருக்கிறார்.. இதனால் மகிழ்ச்சி அடைந்த கிருபைராஜ், இப்படி ஒரு நல்ல விஷயத்தை நீயே வந்து கலைமணியிடம் நேரடியாக தெரிவித்து விடு என்று சொல்லி உள்ளார்.

கொலை
அதன்படி, நேற்று சேலம் கந்தாஸ்ரமம் கோவில் பின்புறம் உள்ள போத்துகுட்டை மலையடிவாரத்தில் கலையரசன், கிருபைராஜ், கலைமணி என 3 பேருமே சந்தித்து பேசி உள்ளனர். ஒருகட்டத்தில் திடீரென ஆத்திரமடைந்த கலையரசன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கிருபைராஜை சரமாரியாக குத்திவிட்டார்.. கிருபைராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த கலைமணி, அந்த பகுதி மக்களிடம் ஓடிச்சென்று விஷயத்தை சொல்லி உள்ளார்.

கலைமணி
பொதுமக்களும் திரண்டு வந்து, கிச்சிபாளையம் போலீசில் தகவல் அளித்தனர்.. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் கிருபைராஜின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு கள்ளக்காதலி கலைமணியை சந்திக்க செல்லும்போது கிருபைராஜ், தன்னுடைய நண்பர் கலையரசனையும் கூடவே அழைத்து செல்வார்... அப்படி செல்லும்போது, கலையரசனுக்கும் கலைமணிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அனுப்பி வைத்தனர்.. பிறகு இந்த கொலை தொடர்பான, கள்ளக்காதல் ஜோடியிடம் விசாரணையிலும் இறங்கினர்.

பழக்கம்
அப்போதுதான் கலைமணி பற்றின தகவல்களை கேட்டு அதிர்ந்து போய்விட்டனர். சேலம் அருகே உள்ள அயோத்தியாப்பட்டணம் ராம்நகரை சேர்ந்தவர்தான் கலைமணி... இவருக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணம் நடந்துள்ளதாம்.. அவர்களிடம் சண்டை போட்டுக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த கார் டிரைவர் முருகேசனுடன் திடீர் பழக்கம் ஏற்பட்டுள்ளது..

அதிர்ச்சி
எனவே முருகேசனை 3வதாக திருமணம் செய்து கொண்டு அயோத்தியாப்பட்டணத்தில் குடியேறி உள்ளார்.அப்போதுதான் கலையரசனுடன் உறவு ஏற்பட்டுள்ளது.. இதற்கு பிறகு கிருபைராஜுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கலையரசனுக்கும், கிருபைராஜிக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.. இப்படி ஒரு கள்ளக்காதல் மற்றும் கொலை சம்பவம் காரணமாக சேலம் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications