லாட்ஜில் வைத்து டார்ச்சர்.. பெண்ணுக்கு வயது 18.. சேலம் சூட்கேஸில் உடல் குறித்து திடுக்கிடும் தகவல்
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வைகுந்தம் மேட்டுக்கடை பேருந்து நிலையம் இருக்கிறது. இதன் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. கடந்த செப்டம்பர் 30 தேதி மதியம் இந்த மண்டபத்தின் அருகே இணைப்பு சாலையோரத்தில் உள்ள ஒரு சிறிய பாலத்தின் கீழ் முட்புதரில் ஒரு பெரிய சூட்கேஸ் கிடந்தது. இதில் இருந்து மிகவும் துர்நாற்றம் வீசி உள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வைகுந்தம் மேட்டுக்கடை பேருந்து நிலையம் இருக்கிறது. இதன் அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் திருமண மண்டபம் அமைந்துள்ளது. கடந்த செப்டம்பர் 30 தேதி மதியம் இந்த மண்டபத்தின் அருகே இணைப்பு சாலையோரத்தில் உள்ள ஒரு சிறிய பாலத்தின் கீழ் முட்புதரில் ஒரு பெயரி சூட்கேஸ் கிடந்தது. இதில் இருந்து மிகவும் துர்நாற்றம் வீசி உள்ளது.

இதை அந்த வழியாக சென்றவர்கள் , இதுபற்றி வைகுந்தம் விஏஓ ஜெயக்குமாரிடம் தெரிவித்தனர். உடனே அவர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்து விட்டு சங்ககிரி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சங்ககிரி டிஎஸ்பி ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கார்த்திகேயினி மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர்.
அப்போது துர்நாற்றம் வீசிய சூட்கேசை அவர்கள் திறந்து பார்த்தனர். அதில் பெட்சீட் துணியால் சுற்றப்பட்டு, ஒரு இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கை, கால்களை மடித்து சுருக்கி அடைக்கப்பட்டு இருந்தது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ் உடலை பிரேத பிரசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் உடலை பார்த்த போலீசாருக்கு இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது.
அந்த பெண் 15 முதல் 20 வயதுக்குட்பட்ட இளம்பெண்ணாக இருக்க வாய்ப்பு உள்ளதாக சந்தேகித்து விசாரணையை தொடங்கினார்கள். சேலம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து போலீசார் கூறும் போது, "சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணுக்கு 18 வயது ஆகிறது. தலையில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இரு கைகளிலும் தலா ஆறு விரல்கள் உள்ளன. உடலை சுற்ற பயன்படுத்தியது லாட்ஜில் பயன்படுத்தப்படும் போர்வை ஆகும். பெண் நிர்வாணமாக இருந்ததால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது. மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பிறகே முழுமையான விபரம் தெரியவரும்" என்றார்கள்.
இளம்பெண் உடல் அடைத்து வைக்கப்பட்டிருந்த சூட்கேஸில் யூஎஸ்ஏ(USA) என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பதும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான விற்பனையகம் பெங்களூரு உள்ளிட்ட நான்கு இடங்களில் இருப்பது தெரியவந்துள்ளது. புதிய சூட்கேஸ் என்பதால் ஷோரூம்களில் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த பெண் கொலை சம்பவம் தொடர்பாக சேலம், நாமக்கல், ஈரோடு மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறார்கள். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications