சினிமாக்காரனாக பார்க்கவில்லை... மாற்றத்தின் கருவியாக மக்கள் என்னை பார்க்கிறார்கள் -கமல்
சேலம்: சினிமாக்காரனாக மக்கள் தன்னை பார்க்கவில்லை என்றும் மாற்றத்தின் கருவியாக மக்கள் தன்னை பார்ப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார். சினிமாகாரனாக மக்கள் தன்னை பார்க்க வேண்டும் என நினைத்தால் வாரந்தோறும் சனிக்கிழமை இரவு வீடுகளில் அமர்ந்தே பார்த்திருப்பார்கள் என்றும் இப்படி கால் கடுக்க வந்து நிற்க வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார்.

நேர்மையை நோக்கிய மாற்றத்துக்கு தமிழகம் தயாராகி வருவதாகவும் அதற்கான கருவியாக தன்னை மக்கள் கருதுவதாகவும் கூறினார். மேலும், மைக் பிடிப்பவர்கள் தான் மக்கள் மத்தியில் உறுதிமொழி கொடுப்பார்கள் என்றும் ஆனால் மக்கள் தன்னிடம் அவர்கள் ஒரு உறுதிமொழி கொடுப்பதாகவும் கூறினார்.

நீங்கள் தான் நாளை என்ற உறுதிமொழியை மக்கள் கொடுப்பதால் தனக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் நாளை நமதே எனவும் முழங்கினார். முதல்நாளான நேற்று சேலம் மாவட்டம் ஏற்காடு, ரெட்டியப்படி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்த கமல் இன்று முதலமைச்சரின் சொந்த தொகுதியான எடப்பாடிக்கு செல்கிறார்.

சேலம் மாவட்டத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் செல்லும் கமல்ஹாசன் இரவு மீண்டும் சேலத்தில் தங்குகிறார். நாளை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செல்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications