வன்மம் வேண்டாம்.. காவல்துறையை மக்கள் பணி செய்ய விடுங்க.. தமிழக அரசை தாக்கி பேசிய அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சேலம்: என்னை வந்து பார்த்துவிட்டு சென்றதற்கு வன்மத்தோடு காவல்துறையில் 2 பேரை சஸ்பெண்ட் செய்வது நியாயமா என்றும், காவல்துறையை மக்கள் பணி செய்ய விடுங்கள் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் மாமாங்கம் பகுதியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- நாகைப்பட்டினத்தில் பாஜக பாதயாத்திரை நடந்தது. அப்போது 2 காவல்துறை அதிகாரிகள் வந்துவிட்டு போனார்கள். அவர்கள் கட்சியில் சேரவில்லை. ஆனால் காவல்துறை அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது.

Let the police do the work of the people: BJP leader Annamalai slams TN Govt

அவர்கள் இங்கே வந்து பார்த்துவிட்டு சென்றதற்கு, வன்மத்தோடு காவல்துறையில் 2 பேரை சஸ்பெண்ட் செய்வது நியாமா.. தர்மமா என்று கேள்வி எழுப்பி டிஜிபிக்கு அறிக்கை வெளியிட்டுள்ளேன். உடனடியாக அவர்களது சஸ்பெண்ட்ஸ் ஆர்டரை ரிமூவ் செய்து அவர்களை மக்கள் பணி புரிய செய்ய வேண்டும். காவல்துறையை செய்யவிடுங்கள்.

அரசியல் கட்சி கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு வந்துவிட்டு போனவர்களை எல்லாம் சஸ்பெண்ட் செய்ய ஆரம்பித்தால் எத்தனை போலீசை தான் நீங்க சஸ்பெண்ட் செய்ய முடியும். இப்போது பாஜகவில் இணைந்தவர்கள் முதல் இன்னிங்க்சில் நீங்க போலீசாக விளையாடிட்டீங்க.. இப்போது அரசியலில் நீங்க செகண்ட் இன்னிங்க்ஸ் விளையாட போறீங்க..

நீங்க இதுவரை உங்கள் வாழ்க்கையில் சந்தித்த அனுபவத்தை நீங்க அரசியலில் கொடுக்க போகிறீங்க. உங்களை பார்த்து இன்னும் நிறைய பேர் பாஜகவுக்கு இணைய வேண்டும். உங்களுக்கு ஊரில் நல்ல மரியாதை இருக்கும். எல்லாரும் உங்களை மதிப்பார்கள். நீங்கள் செய்து வந்த பணிக்காக உங்களுக்கு இந்த பெயர், மதிப்பு உண்டு.

இதனால் நீங்கள் இப்போது பாஜகவில் சேர்ந்ததை பார்த்து உங்கள் ஊரில் உள்ளவர்களும் நல்லவர்கள் தான் பாஜகவில் இருப்பார்கள் என்று நினைப்பர். இரண்டாவது வேண்டுகோள் என்னவென்றால் உங்கள் ஊரில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும். கட்சியின் வேர்களை பலப்படுத்த வேண்டும். உங்கள் ஊரில் பூத் கமிட்டி இருக்கும். அவர்களிடம் பேசி அறிமுகப்படுத்திக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

இதனை தொடர்ந்து அண்ணாமலை வெளியிட்டு ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- இன்றைய தினம் சேலம் மாநகரில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 'பாரத் ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் சங்கம்' சார்பில், நூற்றுக்கும் அதிகமான ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் திரு மோகன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவர் அண்ணன் திரு கே பி ராமலிங்கம் எம்பி அவர்கள் முன்னிலையில், தமிழக பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

காவல்துறையில் கடமை தவறாது பணி புரிந்து, சட்டம் ஒழுங்கைக் கட்டிக் காப்பாற்றிய, பெருமரியாதைக்குரிய தமிழக காவல்துறை அதிகாரிகள், பிரதமர் மோடியின் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, தமிழக பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டது, மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. அவர்கள் வருகை, தூய்மையான அரசியலை முன்னெடுக்கும் பாஜகவுக்கு மேலும் வலு சேர்க்கும் என்பது உறுதி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+