பாவமே.. சேலம் மோடி பிரசார மேடையில் இபிஎஸ் இருக்காரு..உளறி கொட்டிய நடிகை குஷ்பு!
சேலம்: பிரதமர் மோடி சேலத்தில் பங்கேற்ற பாஜக பிரசார மேடையில் ஓ.பன்னீர்செல்வத்தை குறிப்பிடும் போது இபிஎஸ் இங்கே இருக்காரு என நடிகை குஷ்பு உளறியது சமூக வலைதளங்களில் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.
லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பிரதமர் மோடி தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். கோவையில் நேற்று சாலையில் ஊர்வலமாக சென்று பிரசாரம் செய்தார் மோடி. இன்று சேலத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் பிரசாரம் செய்தார் மோடி.

சேலத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான பாமக ராமதாஸ், தமாக ஜிகே வாசன், புதிய நீதி கட்சி ஏசி சண்முகம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். அண்மையில் பாஜகவில் தமது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நடிகர் சரத்குமாரும் இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி திமுக- காங்கிரஸ் இணைந்த "இந்தியா" கூட்டணியை வாரிசு அரசியல், ஊழல் உள்ளிட்டவைகளை முன்வைத்து கடுமையாக விமர்சித்தார்.
சேலம் கூட்டத்தில் பேசிய பாஜக நடிகை குஷ்பு, இந்த முறை 400 தாண்டி என்.டி.ஏ. கவர்மென்ட் இருக்கப் போகுது.. ஆனால் பிரதமர் மோடி அவர்கள் சொல்லும் போது தமிழகத்தில் இருந்து எத்தனை சீட் ஜெயிச்சு அவர் கையில் கொடுக்கப் போகிறோம்? இது நம்ம கையில்தான் இருக்கிறது. இன்னைக்கு பாஜகவை பார்க்கும் போது அத்தனை பெரிய தலைவர்கள் மேடையில் இருக்கின்றனர். இபிஎஸ் அவர்கள் இருக்கிறார்கள்.. சரத்குமார் அவர்கள் இருக்கிறார்.. ஏசிஎஸ் அவர்கள் வரப் போகிறார்.. டிடிவி அவர்கள் இருக்கிறார்.. மற்ற கட்சியில் இருந்து எல்லோரும் வந்துகிட்டு இருக்காங்க..வேற கட்சியில் இருந்து பாஜகவில் இணையறாங்கன்னு அதுக்கு காரணம் வந்து இந்த நாட்டுக்கு நல்லது யாரால் செய்ய முடியும்னா அது மோதி அவர்களால் மட்டும்தான் என்பதால் இணைகிறார்கள் என்றார்.
அதாவது ஓ.பன்னீர்செல்வத்தை ஓபிஎஸ் என குறிப்பிடுவதற்கு பதிலாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை குறிப்பிடும் இபிஎஸ் என நடிகை குஷ்பு, மோடியின் பிரசார மேடையில் தவறுதலாக பேசினார். இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.
-
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications