மகளிர் உரிமை தொகை திட்டம் பயனாளிகள்.. 1000 ரூபாய் சும்மா இல்லை! அமைச்சர் கோவி. செழியன் சொன்ன ரகசியம்
சேலம்: மத்திய அரசின் நிதி நெருக்கடியையும் மீறி முதல்வரின் நிர்வாக திறமையால் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக அமைச்சர் கோவி.செழியன் ஓமலூரில் புகழாரம் சூட்டினார். மகளிர் உரிமைத் தொகையால் கிராமப்புற பொருளாதாரம் செழிப்படைந்துள்ள நிலையில், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும் கோவி.செழியன் மேலும் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதிகளில் நடைபெற்ற "தமிழ்நாடு தலைகுனியாது" மற்றும் தேர்தல் பரப்புரை கூட்டங்களில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

ஓமலூர் சேலம் கோவி செழியன்
ஓமலூர் தொகுதியில் பொதுமக்கள், மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினரை சந்தித்து கருத்துகளை கேட்டறிந்த அவர், மக்களின் கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவார் என உறுதி அளித்தார். தேர்தலுக்கு முன்பாகவே மக்களை நேரடியாகச் சந்தித்து, அவர்களின் கருத்துகளை தேர்தல் அறிக்கையாக மாற்றும் ஒரே இயக்கம் திமுக மட்டுமே என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் தற்போதைய வளர்ச்சி குறித்து பேசிய அமைச்சர், மத்திய அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளை கொடுத்த போதிலும், முதல்வர் ஸ்டாலினின் சிறப்பான நிர்வாக திறமையால் தமிழகம் இன்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் திட்டம்
குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிராமத்தில் சுமார் 2,500 பெண்களுக்குத் தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்போது, அந்த ஒரு கிராமத்தில் மட்டும் மாதந்தோறும் 25 லட்சம் ரூபாய் புழக்கத்தில் இருக்கிறது.
இது மளிகை கடைகள், டீக்கடைகள் மற்றும் சிறு வணிகர்களிடையே பணப்புழக்கத்தை அதிகரித்து, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளதாக அவர் விளக்கினார்.
அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகளை விமர்சித்த அமைச்சர், "வரவிருக்கும் தேர்தலில் திமுக தான் முதலிடத்தை பிடிக்கும் என்றும், மற்ற கட்சிகள் 2ம் இடத்தை பிடிக்கவே தங்களுக்குள் போட்டியிட்டு வருகின்றன.. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி பெற்ற வெற்றியின் எரிச்சல் இன்னும் பாஜகவுக்குத் தீரவில்லை..
திமுக அரசு - பயனாளிகள்
அதன் காரணமாகவே மத்திய பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.. எத்தனை மோடிக்கள் அல்லது அமித்ஷாக்கள் வந்தாலும், ஓமலூர் தொகுதியில் திமுகவின் வெற்றியை எவராலும் தடுக்க முடியாது.. அது உதயசூரியனின் வெற்றிக்கோட்டை
மத்திய அரசின் பாராமுகத்திற்கு தமிழக மக்கள் வரும் தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்,.. இந்த தேர்தல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான போராட்டமாக அமையும்... திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.. மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும் என்ற சூழல் நிலவுகிறது" என்று நம்பிக்கையுடன் கோவி செழியன் தெரிவித்தார்.
ரூ.1000 அரசின் சூப்பர் திட்டம்
திமுக அரசின் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் நேரடியாகக் குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கிற்கு செல்லும் பணம் அவர்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கிராமப்புற அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிதிப் புழக்கம் அடித்தட்டு மக்களிடையே ஆளுங்கட்சி மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதால் அது தேர்தலில் சாதகமான வாக்குகளாக மாற அதிக வாய்ப்புள்ளது.
அரசின் இந்த நேரடி பயன் திட்டத்தால் பயனடைந்த கோடிக்கணக்கான பெண்கள் வரவிருக்கும் தேர்தலில் திமுகவின் முக்கிய வாக்கு வங்கியாக திகழ்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது... இந்த நேரத்தில், அதுவும் தேர்தல் நேரத்தில் கோவி செழியனின் பேச்சு திமுகவுக்கு வலுசேர்த்துள்ளது..
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications