கிருஷ்ணகிரி அருகே.. பைக் மீது மோதி நேருக்கு நேர் மோதிய அரசு பஸ்.. வாலிபர் பரிதாப பலி
சேலம்: இரு சக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் அரசு பஸ் மோதியதில், வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊத்தங்கரை சென்று கொண்டிருந்த, கல்லாவி புதூரைச் சேர்ந்த கிட்டப்ப நாயுடு மகன் முருகேசன் என்பவர் மீது திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஊத்தங்கரை அடுத்த வீரியம்பட்டி கூட்ரோட்டு அருகே நேருக்கு நேர் மோதியது.

இதில், இரு சக்கர வாகனத்தில் வந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் முருகேசனின் உடலை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த குருபராத்தப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ் என்ற 20 வயது வாலிபரும், குருபசப்படியை சேர்ந்த அவரது நண்பரான நவீன்குமார் என்பவரும் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றனர். சந்தோஷ் பைக்கை ஓட்டிய நிலையில், சப்படியிலுள்ள பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் இவர்கள் சென்ற பைக் மீது வேகமாக மோதி விட்டுச் சென்றுள்ளது. இதில், சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

நவீன்குமார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். சூளகிரி போலீசார் இதுபற்றி விசாரிக்கின்றனர். கிருஷ்ணகிரி-பெங்களூர் நெடுஞ்சாலையில் பைக்குகள் செல்ல போதிய வசதி இல்லாததால் மெயின் ரோட்டில் அவர்கள் செல்கிறார்கள். வேகமாக செல்லும் வாகனங்களில் மோதி இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பாதிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications