சேலத்தில் வீடுகளுக்கே சென்று பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசம் வழங்கிய மார்வெல் பவுண்டேஷன்
சேலம்: சேலத்தில் கொரோனா நோயை கட்டுப்படுத்தும் சித்த மருந்தான "கபசுரக் குடிநீர்" ஓமியோபதி மருந்தான "ஆர்சனிக் ஆல்பம் 30" மற்றும் "முகக்கவசம்" ஆகியவற்றை மார்வெல் பவுண்டேஷன்" அறக்கட்டளை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியது.
Recommended Video
சேலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அண்மைக்காலமாக மிக அதிகமாக உள்ளது. ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருந்த பாதிப்பு படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இப்போது நாள்தோறும் சுமார் 80 பேர் என்கிற அளவிற்கு தொற்று பரவி வருகிறது. தற்போது சேலத்தில் கொரோனா தொற்றால் 1247 பேர் பாதிக்கப்பட்டுளளனர்.

கொரோனா பரவலை தடுக்க பல்வேறு விழிப்புணர்வை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் தனியார் தொண்டு நிறுவனங்களும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் சேலம் மார்வெல் பவுண்டேஷன்" அறக்கட்டளை கொரோனாவை தடுக்க விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பொன்னம்மாபேட்டை புத்துமாரியம்மன் கோயில் பகுதியில் "மார்வெல் பவுண்டேஷன்" அறக்கட்டளை சார்பில் 05-07-2020(ஞாயிறு) காலை 7.00 முதல் 8.00 மணி வரை கொரோனா நோய் தடுப்புக்கான சித்த மருந்தான "கபசுரக் குடிநீர்" ஓமியோபதி மருந்தான "ஆர்சனிக் ஆல்பம் 30" மற்றும் "முகக்கவசம்" ஆகியவை சுமார் 500 நபர்களுக்கு வழங்கப்பட்டது.

மத்திய மற்றும் தமிழக அரசின் முறையான சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் ஆகிய அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி வீடுகளுக்கே சென்று கொடுக்கபட்டுள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடனும், சமூக இடைவெளியை பின்பற்றியும் முககவசம் மற்றும் கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை வாங்கினர்.

-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications