கர்நாடகாவில் இருந்து 72ஆயிரம் கன அடி நீர் திறப்பு - மேட்டூர் அணை நீர்மட்டம்91 அடி
கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 72 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 91 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் : கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 72 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 70,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் 91 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த சில தினங்களாக கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த அணைகள் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியிருப்பதால் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் காவிரியில் திறந்து விடப்படுகிறது. கபினியில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 37ஆயிரம் கனஅடியும் நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்த தண்ணீர் இருமாநில எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வருகிறது. இங்கு நேற்று காலை 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, மாலையில் 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இது இன்று காலை 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒகேனக்கல் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 89.77 அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி 91.45 அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 18,000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு இதே அளவு நீடித்தால் விரைவில் 100 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications