வேகமாக உயரும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்! காவிரி கரையோர மக்களே உஷார்!
சேலம்: கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன. எனவே அதிலிருந்து உபரி நீர் திறக்கப்படுவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக அணை எப்போது வேண்டுமானாலும் நிரம்பலாம் என்கிற நிலையில் இருக்கிறது. ஆகையால் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக உயர்ந்திருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். கர்நாடகாவில் கனமழை பெய்யும் போது கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இதனால் அங்கிருந்து தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.

கடந்த 27ம் தேதி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 60,740 கனஅடியாக இருந்தது. நேற்று காலை இது 73,452 கனஅடியாகவும், மாலையில் 80,984 கனஅடியாகவும் உயர்ந்தது. எனவே டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரின் அளவு 22,500 கனஅடியிலிருந்து 26,000 கனஅடியாக உயர்த்தப்பட்டது. இருப்பினும் நீர் திறப்பை விட, நீர் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் நேற்று அணையின் நீர்மட்டம் 117.93 அடியாகவும், நீர் இருப்பு 90.20 டிஎம்சியாகவும் இருந்தது.
இன்று காலை 119.22 அடியாக நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் 0.78 அடிதான் இருக்கிறது. நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும்போது, உபரி நீர் அப்படியே முழுவதுமாக திறந்து விடப்படும். இருப்பினும் நேற்று நீர்வரத்து 80,948 கனஅடியாக இருந்த நிலையில், இன்று 68,000 கனஅடியாக குறைந்திருக்கிறது. இப்படியே நீர்வரத்து குறைந்தால் சிக்கல் இல்லை. ஒருவேளை நீர்வரத்து அதிகரித்தால் அது அப்படியே காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும்.
எனவே எப்போது வேண்டுமானாலும் உபரி நீர் வெளியேற்றப்படலாம் என்கிற சூழல் இருப்பதால் சேலம், ஈரோடு, நாமக்கல் தொடங்கி தஞ்சை, நாகை வரை 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நேற்று விடுக்கப்பட்டிருந்தது.
அதில், "மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று (28.06.2025) நண்பகல் 12.00 மணியளவில் 117.390 அடியை எட்டியுள்ளது. அணையில் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் விரைவில் அதிகபட்ச கொள்ளளவான 120 அடியை எட்டும் என்றும், அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் 50,000 கனஅடி முதல் 75,000 கன அடி வரை எந்நேரத்திலும் திறந்துவிடப்படும் என்றும், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எனவே காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் என 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications