மேட்டூர் அணையில் நீர் மட்டம் குறைவு...டெல்டா விவசாயிகளுக்கு அதிர்ச்சி!!
மேட்டூர்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து இருப்பதால், அணையின் நீர்மட்டம் இன்று காலை 92.81 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது வினாடிக்கு 4,513 கன அடியிலிருந்து 4,031கன அடியாக குறைந்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 55.92 டிஎம்சி ஆக இருக்கிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டமும் வேகமாக சரியத் துவங்கியுள்ளது. இதற்குக் காரணம் கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் மழை அளவு குறைந்து இருப்பதுதான். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடந்த 26ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,957 கன அடியிலிருந்து 6,204 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 95.92 அடியாகவும், நீர் இருப்பு 59.66 டி.எம்.சி.யாகவும் உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications