பொங்கி வரும் காவிரி.. ஒகேனக்கல் அருவிகளில் பெருக்கெடுத்த வெள்ளம்.. உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்
சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடியை கடந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 21.50 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பொழியவில்லை. பல ஆண்டுகளில் இல்லாத வறட்சி என்று கூறி தண்ணீர் தர மறுக்கிறது கர்நாடகா. கிருஷ்ணராஜ சாகர், கபிணி அணைகளில் நீர் இருப்பு அபரிமிதமாக இருந்தாலும் ஷட்டர்களை மூடிவிட்டது கர்நாடகா.

நீர் வரத்து குறைந்து போனதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35 அடியை எட்டியது. இதனையடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10ஆம் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தமிழகத்தின் பங்கு தண்ணீரை கர்நாடகா தர மறுத்தாலும் வருண பகவான் கருணையினால் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த 1 மாதத்தில் 20 அடி உயர்ந்து தற்போது 55 அடியாக உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை 8,000 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 14,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6.498 கனஅடியில் இருந்து 7,563 கனஅடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 8,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்தது. மாலை நேரத்தில் பெய்த கனமழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 8,000 கனஅடியில் இருந்து 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, ஐவர்பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதேபோல் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 6,498 கனஅடியில் இருந்து 7,563 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 54.55 அடியில் இருந்து 54.85 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் நீர் இருப்பு 21.50 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 250 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடித்தால் அணைக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் தண்ணீர் தர முடியாது என்று விடாப்பிடியாக நிற்கிறது கர்நாடகா. அணைகளின் கதவுகளை கர்நாடகா சாத்தினாலும் வருண பகவானின் கருணையால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.
-
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி -
ஸ்டாலினா? எடப்பாடியா? உண்மையிலேயே யார் 'கெத்து'? ரெக்கார்டு என்ன சொல்லுது? -
Corona: முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்! ஆனால்..! எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு! -
"எனக்கும் மரணம் வரும்.. என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது” - முதல்வர் ஸ்டாலின் -
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்? இதுதான் காரணம் - எடப்பாடி சொன்ன சீக்ரெட்! -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
ராகுல் காந்தி பிரச்சாரத்திற்கு வருவாரா? நேரடியாக கேட்ட திமுக.. பதில் சொல்ல தயங்கும் காங்கிரஸ்! -
சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்.. செல்ஃபி எடுத்த பயணிகள் -
அடித்தாடும் ஸ்டாலின்.. இன்று 4 ஆம் கட்ட பரப்புரை.. தஞ்சாவூரில் தொடங்குகிறார் முதல்வர் -
"எடப்பாடி பழனிசாமி விருப்பப்படி நான் மண்ணுக்கு போகலாம், ஆனால்.." ஸ்டாலின் தந்த பதிலடி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம்












Click it and Unblock the Notifications