மேட்டூர் அணையில் நீர் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! பொங்கும் காவிரி.. டெல்டா விவசாயிகள் குஷி
சேலம்: காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று (ஜூன் 12) முதல்வர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்துளார். காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து வைத்து மலர் தூவி வரவேற்றுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதற்கட்டமாக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இன்று திறக்கப்பட்டுள்ள நீரின் மூலம் தஞ்சாவூர், நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

சென்னையில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் கோவைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டார். அதையடுத்து, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
சேலத்தில் ஸ்டாலின்
நேற்று மாலை 5 மணியளவில் சேலம் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, பவானி - மேட்டூர் எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து நவப்பட்டியில் உள்ள நீர்வளத்துறை ஆய்வு மாளிகை வரை 11 கி.மீ. தூரம் வாகனத்தில் பயணித்தபடியே பொதுமக்களை சந்தித்து, குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர், நவப்பட்டியில் உள்ள திருமலை வாசவி திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். நேற்று இரவு, மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான ஆய்வு மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.
மேட்டூர் அணையை திறந்து வைத்தார் ஸ்டாலின்
இந்நிலையில் இன்று (ஜூன் 12) காலை, காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணையின் இடது கரை மற்றும் வலது கரை, மேட்டூர் அணை பூங்கா ஆகிய இடங்களில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வலது கரையில் விழா மேடை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். முதற்கட்டமாக விநாடிக்கு 3000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேறியதும் மலர் தூவி மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
சேலத்தில் இன்று
பின்னர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, சேலம் இரும்பாலை அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ஒரு லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், சிறப்புரையாற்றுகிறார். மேலும், சேலம் மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்.
இன்று சென்னை திரும்புகிறார்
இதைத் தொடர்ந்து, சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகைக்கு வரும் முதல்வர் மதிய உணவு எடுத்துக் கொள்கிறார். சிறிது ஓய்வுக்குப் பிறகு, அஸ்தம்பட்டியில் இருந்து புறப்பட்டு காமலாபுரம் விமான நிலையத்திற்குச் செல்கிறார். அங்கிருந்து மாலை 4.45 விமானம் மூலம் முதல்வர் சென்னைக்குச் செல்கிறார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு விமர்சையாக வரவேற்பு அளிக்கவும், அரசு நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் அமைச்சர்கள் எ.வ.வேலு, வழக்கறிஞர் ராஜேந்திரன், எம்.பி.,க்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி ஆகியோர் மேற்பார்வையில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications