ராமேஸ்வரத்தில் ஒருவர் 22 கிணறுகளில் நீராடிவிட்டு.. பிரதமர் மோடியை டைமிங்கில் விமர்சித்த உதயநிதி
சேலம்: சேலத்தில் இன்று நடந்த திமுக இளைஞரணி மாநாட்டில், மாநில உரிமையை காக்க 22 தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசினர். ஆனால் ராமேஸ்வரத்தில் இன்று ஒருவர் 22 கிணறுகளில் நீராடிவிட்டு ராமநாத சுவாமி பாக்க போயிட்டு இருக்காரு என்று உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
சேலத்தில் திமுக இளைஞரணி மாநாடு இன்று நடந்தது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மிக பிரமாண்டமாக நடந்தது. மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- மாணவர்களுடைய மருத்துவர் ஆகும் கனவை பறிக்கின்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சென்ற வருடம் ஆகஸ்டு மாதம் 20 ஆம் தேதி நீட் தேர்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணியினர் உண்ணாவிரத போராட்டம் இருந்தோம்.

அதோடு விடாமல் மக்கள் போராட்டமாக மாற்ற வேண்டும் என்று நீட் தேர்வு கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்தோம். அப்போது தலைவரிடம் சொன்னோம். 50 நாளில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறுவோம் என்று.. ஆனால் 80 லட்சம் கையெழுத்துக்களை பெற்றுள்ளோம். இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால், டெல்லியில் சென்று போராட்டம் நடத்தவும் திமுக இளைஞரணியினர் தயாராக இருக்கிறார்கள்.
மாநில உரிமைகளை பறிப்பதையே மத்திய அரசு முழு வேலையாக செய்துகொண்டு இருக்கிறது. அதற்காக தான் மாநில உரிமைகள் மீட்பு முழக்கம் என்று இந்த மாநாடை நாம் நடத்துக்கிறோம். அடிமை அதிமுக உதவியோடு, தவழ்ந்து தவழ்ந்து முதல்வர் ஆன பழனிசாமி மூலம் தான் நம்முடைய உரிமைகளை மத்திய அரசு பறித்தது. வெளியுறுவுத்துறை ராணுவம் மட்டும் மத்திய அரசிடம் இருந்தால் போதும் என்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கை.
ஆனால் இன்றைக்கு எல்லா துறைகளையும் மத்திய அரசு கையில் வைத்திருக்கிறது. கல்வி, சுகாதாரம் என எல்லா துறையையும் மாநில அரசின் உரிமைகளை சட்டத்திற்கு புறம்பாக கையில் வைத்திருக்கிறது. குறிப்பாக வரி வருவாய். நம்மிடம் அதிமாக வருவாயை பெற்றுக்கொண்டு திருப்பி கொடுப்பதில்லை. நாம் 1 பைசா ஒன்றிய அரசுக்கு வரியாக செலுத்தினால் வெறும் 29 காசுதான்.
இதேபோல் நாம் கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் வருவாய் வரியாக கட்டியிருக்கிறோம். ஆனால் அவர்கள் நமக்கு திருப்பி தந்தது 2 லட்சம் கோடி தான். இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன். இந்த முயற்சியை 2000 வருடமாய் முயற்சி செய்கிறீர்கள்.. ஆனால் உங்களால் இதுவரை தமிழகத்தில் கால் வைக்க முடியவில்லை. இந்த முயற்சியால் இன்னும் 2000 வருசம் ஆனாலும் வெற்றி பெற முடியாது. தமிழரின் அடையாளத்தை அழிக்க நினைத்தால் நீங்கள் தான் அழிந்து போவீர்கள்.
உங்கள் எண்ணத்தை ஒருபோதும் திமுக அனுமதிக்காது. ஏனென்றால் இந்த இயக்கத்தை தற்போது வழிநடத்துவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மாபெரும் தலைவர். ராமேஸ்வரத்தில் ஒருவர் 22 கிணறுகளில் நீராடிவிட்டு ராமநாத சுவாமி பாக்க போயிட்டு இருக்காரு.. ஆனா நாம இங்க மாநில உரிமையை காக்க 22 தலைப்புகளில் நம்முடைய பேச்சாளர்கள் நடத்திய உரை கிழவர் ராமசாமியை நோக்கியுள்ளது.. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications