கெட்டிமேளம் இல்லை! பட்டாடைகள் இல்லை! பொண்ணு மாப்பிள்ளை ரெடி! உதயநிதி தலைமையில் சாதிமறுப்பு திருமணம்
சேலம்: சேலத்தில் திராவிடர் விடுதலை கழகம் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அந்த மாநாட்டு மேடையிலேயே சுயமரியாதை திருமணம் ஒன்றை தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார்.
சேலத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில், ''இது தமிழ்நாடு இளம் தலைமுறையினரின் எச்சரிக்கை மாநாடு'' என்ற தலைப்பில் கடந்த 2 நாட்களாக மாநாடு நடைபெற்றது.
மாநாட்டின் நிறைவு விழாவில் பங்கேற்கச் சென்ற உதயநிதி ஸ்டாலின், சமூக நீதியின் தலைமையகம் தமிழ்நாடு என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசினார்.

பேசி முடித்து விட்டு மேடையிலிருந்து புறப்படவிருந்த அவருக்கு அவரே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் ஒன்று காத்திருந்தது. மாநாட்டு மேடையிலேயே சாதி மறுப்புத் திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க கூடிய வாய்ப்பு உதயநிதியை தேடி வந்தது.
அரியலூரை சேர்ந்த எழிலரசன் -காயத்ரி என்ற ஜோடியின் சாதி மறுப்பு மற்றும் சுயமரியாதை திருமணத்தை மணமக்களின் இரு வீட்டார் முன்னிலையில் நடத்தி வைத்த உதயநிதி ஸ்டாலின் மணமக்களை மனமாற வாழ்த்தினார்.
உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி நடத்தி வைத்த திருமணங்களிலேயே இந்த திருமணம் சற்று வித்தியாசமானதாக இருந்தது. பட்டாடைகள் இல்லை, உறவினர்கள் கூட்டம் இல்லை, கெட்டிமேளம் இல்லை, கருப்புச் சட்டை அணிந்தவாறு மணமக்கள் மாலை மாற்றிக்கொண்டு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்தனர்.

சீர்திருத்த திருமணங்களை பொறுத்தவரை 1967-க்கு முன்பு சட்டப்படி - முறைப்படி செல்லுபடியாகாத நிலையில் தான் நடந்திருக்கிறது.
1967 -ல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பொறுப்பேற்று, அண்ணா முதலமைச்சராக வந்த பிறகு தான் சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற தீர்மானத்தை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றி தந்தார்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications