சேலத்தில் ஸ்டாலின், கமல்ஹாசன் முன்பே.. விஜய்யை பங்கமாக கலாய்த்த பிரேமலதா
சேலம்: சேலத்தில் பிரேமலதா விஜயகாந்த், கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக பேரணி சென்றார். அங்கு நடந்த பிரம்மாண்ட பிரச்சாரக்கூட்டத்தில் மூன்று பேருமே உரையாற்றினார்கள். பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது, இன்று தான் அண்ணணுடன் முதல் முறையாக வாக்கிங் போனேன்.. முதல்வர் ஸ்டாலின் இவ்வளவு தூரம் ஆக்டிவ் அரசியலில் ஈடுபடுகிறார் என்றால், அதற்கு காரணம் வாக்கிங் மற்றும் உடற்பயிற்சி தான் காரணம் என்று கூறினார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், நான் எவ்வளவோ கூட்டத்தை பார்த்துள்ளேன்.. ஆனால் அண்ணன் கூட இதுதான் முதல் முறை.. என் அண்ணன் ஸ்டாலின் தான் பெண் இனத்தின் பாதுகாவலர்..இன்றைக்கு நான் கம்மியாக பேச வேண்டும்.. ஏனெனில் நேரம் குறைவு.. என்னை விருத்தாசலத்தில் சேலம் வர வேண்டும் உரிமையோடு அழைத்த அண்ணன் எவ வேலு அவர்களுக்கு நன்றி.. கடமை கண்ணியம், கட்டுப்பாடு என்பதாகவே தமிழ்நாடு உள்ளது. நமது கூட்டணி 234 தொகுதிகளிலும் வெல்லும்.

எதிர்க்கட்சியே இல்லை என்கிற நிலையை இந்த தேர்தல் நிச்சயம் உணர்த்தும். நான் என் தொகுதிக்கு மட்டும் போய் பிரச்சாரம் செய்யவில்லை.. யாரெல்லாம் என்னை உரிமையோடு பிரச்சாரம் செய்ய அழைத்தார்களோ அத்தனை இடத்திற்கும் சென்றேன்.. அண்ணன் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் அறிக்கை உங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. திமுக என்பது 75 வருட கட்சி.. நீங்க (விஜய்) இப்ப தான் லாலிபாப் சாப்டுகிற பேபி. அரசியலில் நீங்க சின்ன பையன். ஹீரோ இல்லை" என்று கூறினார்.
முன்னதாக விருத்தாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது, "விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடும் எனக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும். உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நான் உங்கள் உடனிருந்து பார்த்துக்கொள்வேன். சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைப்பதுடன் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு உங்களை அழைத்து ரூ.8,000 கூப்பன் கொடுப்பேன்.
நானே அண்ணனான முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பேசி தொகுதிக்கு வேண்டியதை நிறைவேற்றிக் கொடுப்பேன். விருத்தாசலத்தை முதலில் மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தொகுதியில் பேருந்து செல்லாத கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்படும். சாலை, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விருத்தாசலத்துக்கு பிரச்சாரத்துக்கு வருவதாகக் கூறியிருக்கிறார். நீங்கள் எல்லாம் எனக்கு பிள்ளைகள் மாதிரி. உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதை நான் செய்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications