Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாயை கொடுத்து வசமாக மாட்டி கொண்ட நித்தியானந்தா.. லிங்கம் எங்கே.. விசாரணையில் குதித்த போலீஸ்

மூலவர் லிங்கத்தை மீட்க நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Complaint against Nithyanandha | லிங்கம் எங்கே..விசாரணையில் குதித்த போலீஸ்..சிக்கலில் நித்யானந்தா

    சேலம்: வாயை கொடுத்து வசமாக மாட்டி கொண்டுள்ளார் நித்யானந்தா.. பக்தர்களை குஷியாக்க என்னவோ சொல்ல போய்.. அது இப்போது போலீஸ், கேஸ் என்றாகி வருகிறது.

    திருவண்ணாமலையைச் சேர்ந்த சாமியார் நித்யானந்தா, கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவரது பேச்சுக்கள் அடிக்கடி யூடியூப்பில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பேச்சுமே வைரல்தான்.. சில சமயம் இதை கேட்கும்போது நமக்கு தலையே சுற்றிவிடும்.

    தன்னுடைய கட்டளையை கேட்டுதான் சூரியனே 40 நிமிடங்கள் தாமதமாக உதித்தது என்று சொல்லும்போதே பலர் உஷாராகாமல் போய்விட்டனர். இதற்கு பிறகுதான் ஜலகண்டேஷ்வரர் கோயில் லிங்கம் தொடர்பான வீடியோவை வெளியிட்டார்.

    கோவில்

    கோவில்

    அதில், மேட்டூர் அணையின் நீருக்குள் உள்ள பழமையான சிவன் கோவிலின் மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தார். அதுமட்டுமில்லை.. அந்த கோவிலை போன ஜென்மத்தின் போது தானே கட்டியதாகவும் தெரிவித்தார்.

    புகார்

    புகார்

    இப்படி சொல்லியதுமே 2 பேர் கிளம்பி ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க போய்விட்டனர். பாலவாடி வேலுசாமி, சக்திவேல் ஆகியோர், பாலவாடி ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான லிங்கத்தை நித்யானந்தா திருடி சென்றதாக கொளத்தூர் போலீசில் புகார் தந்துள்ளனர்.

    அறநிலையத்துறை

    அறநிலையத்துறை

    அதில், "மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியில் ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த கோவிலானது மேட்டூர் அணை கட்டும்போது இடமாற்றம் செய்யப்பட்டு பாலவாடி கிராமத்தில் புனரமைக்கப்பட்டது.

    லிங்கம்

    லிங்கம்

    இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமியார் நித்யானந்தா வெளியிட்ட வீடியோ ஒன்றில், மேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதியான பண்ணவாடியில் தண்ணீரில் மூழ்கியுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் முற்பிறவியில் தன்னால் கட்டப்பட்டது என்றும், அங்கு இருந்த மூலவர் லிங்க சிலை தற்போது தன்னிடம் உள்ளது எனவும் குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். எனவே, அவரிடம் இருந்து ஜலகண்டேஸ்வரர் கோவில் மூலவர் லிங்கத்தை மீட்டுத்தர வேண்டும்" என்று புகாரில் தெரிவித்துள்ளனர்.

    விசாரணை

    விசாரணை

    உண்மையிலேயே லிங்கம் நித்யானந்தாவிடம்தான் உள்ளதா? அல்லது வெறும் பரபரப்புக்காக நித்யானந்தா இப்படி வீடியோவில் பேசினாரா என்பது இனிமேல்தான் போலீசார் விசாரணையில் தெரியவரும். இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை ஒரு பக்கம் என்றால், தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீசார் தலையிட்டு விசாரணை நடத்தி சாமியார் நித்யானந்தாவிடம் இருந்து மூலவர் லிங்கத்தின் சிலையை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கையும் எழ ஆரம்பித்துள்ளது.

    வைரல் வீடியோ

    வைரல் வீடியோ

    இது எல்லாவற்றிற்கும் மேலாக, போன ஜென்மத்தில் கோயிலை தானே கட்டியதாக சொன்ன அந்த வீடியோவை நெட்டிசன்கள் திரும்பவும் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். அதனால், கர்நாடக மாநிலம் பிடதிக்கு சென்று நித்தியானந்தாவை அழைத்து வந்து மூல லிங்கம் எங்கே இருக்கிறது என்பது குறித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு இருக்கிறார்களாம்!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+