’மாமன்னன்’ படக்கென காலில் விழுந்த மூதாட்டி! பதறி போய் உதயநிதி செய்த செயல்! கூட நின்ற மாரி செல்வராஜ்!
சேலம் : மாமன்னன் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்ட திமுக இளைஞரணி தலைவரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது, நலத் திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட மூதாட்டி உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்து நன்றி தெரிவித்தார்.
சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படம் கடந்த ஆறு மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜருகு மலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் படப்பிடிப்பு காட்சி நடத்தப்பட்டது அப்பொழுது அங்குள்ள மலை மக்கள் இந்த பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்த எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று கோரிக்கை வைத்தனர்.

உதயநிதி ஸ்டாலின்
கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின், இன்று மாமன்னன் திரைப்படத்தின் இறுதி
கட்ட படப்பிடிப்பு சேலம் கருப்பூர் அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜருகு மலையில் உள்ள அரசு பள்ளியில் தரம் உயர்த்துவதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்படுகிறது.

நலத்திட்ட உதவிகள்
அதற்காக உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை பங்களிப்பு தொகையாக 13 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை உதவி ஆட்சியர் பாலச்சந்திரன் அவர்களிடம் அந்த படப்பிடிப்பு தளத்தில் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதனைத் தொடர்ந்து ஜருகு மலையில் எதிரே வரும் வாகனங்கள் அறிந்து கொள்ளும் விதமாக 10 குவியாடி வழங்கப்பட்டது

உதவி தொகை
தொடர்ந்து ஜருகு மலையில் வசிக்கும் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் விதமாக விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மளிகை கடை அமைப்பதற்கான அனைத்து பொருட்களையும் வழங்கினார். தொடர்ந்து மாணவ மாணவிகள் திருநங்கைகள் மாற்றுத்திறனாளிகள் என 55 நபர்களுக்கு உதவி தொகை வழங்கினார்.

காலில் விழுந்த மூதாட்டி
இந்த நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை பெற்றுக் கொண்ட மூதாட்டி உதயநிதி காலில் விழுந்து நன்றி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த உதயநிதி பாட்டி அப்படியெல்லாம் செய்யக்கூடாது என அன்புடன் கண்டித்தார். தொடர்ந்து பள்ளி குழந்தைகள் இளைஞர்கள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications