பெரம்பலூரில் துள்ளிய முயல்.. சேலத்தில் ஒரே பரபரப்பு.. "முயலுக்கு மூணு கால்" அடம்பிடித்த ராஜபாளையம்
சேலம்: முயல் வேட்டையில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய வனத்துறையினர் சென்றிருக்கிறார்கள்.. அப்போதுதான் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
சேலம் - பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உள்ளது கிழக்கு ராஜாபாளையம் பகுதி.. இங்கு ஒரு அம்மன் கோயில் இருக்கிறது.. சுற்றுவட்டாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில், வருடா வருடம் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

இந்த திருவிழாவின்போது, முயல் வேட்டைகள் பாரம்பரியமாக நடத்தப்படுமாம். ஆனால், முயல்வேட்டையில் ஈடுபட கூடாது என்று ஏற்கனவே வனத்துறையினர் தடை விதித்திருக்கிறார்கள்.. எனினும் இந்த முறை திருவிழாவையொட்டி, முயல் வேட்டை நடத்தக்கூடும் என்பதால், மாவட்ட எல்லைப் பகுதிகளில் வனத்துறையினர் தீவிரமான கண்காணிப்பு சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
ராஜகோபாலபுரம்: இப்படிப்பட்ட சூழலில், ராஜகோபாலபுரம் பகுதியில் சிலர் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் வனத்துறையினருக்கு கிடைத்தது.. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, மணிகண்டன், குணசேகரன் ஆகிய இருவரும், வளர்ப்பு நாய்களுடனும், கருவிகளுடனும் முயல்வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்..
ஆனால், வனத்துறையினர் அங்கு செல்வதற்குள், ஏற்கனவே 2 முயல்களை அவர்களை வேட்டையாடிவிட்டனர்.. மேலும் சில முயல்களை வேட்டையாட வலையை விரித்தபோதுதான், இருவரையுமே போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.. பிறகு அவர்களிடம் விசாரிப்பதற்காக, வனத்துறை அலுவலகத்திற்கும் அழைத்து செல்ல முயன்றனர். ஆனால், அதற்குள், ஒட்டுமொத்த கிழக்கு ராஜபாளையம் மக்களும் திரண்டு வந்துவிட்டார்கள்..
பிடிவாதம்: பாரம்பரியமாகவே, திருவிழா காலங்களில் இப்படி முயல்வேட்டையை நடத்தி வருவதால், வனத்துறையினர் இதனை தடுக்கக் கூடாது என்று சொல்லி வாக்குவாதம் செய்தார்கள்.. ஈடுபட்டனர். முயலை வேட்டையாடுவது சட்டப்படி தவறு என்று வனத்துறையினர் சொல்லியும், கிராம மக்கள் தங்கள் பிடிவாதத்தை விடவில்லை. தொடர்ந்து வனத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..
ஒருகட்டத்தில், வனத்துறையினர் மீது கொடூர தாக்குதலையும் நடத்தினார்கள்.. பிறகு, வனத்துறையினரை கீழே தள்ளிவிட்டு, ஜீப்பில் இருந்த 2 பேரையும் மீட்டுக்கொண்டு, அங்கிருந்து ஆவேசமாக கிளம்பி போய்விட்டார்கள.

விசாரணை: இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே விழித்து நின்றார்கள் பாதிக்கப்பட்ட வனத்துறையினர்.. பின்னர் வீரகனூர் போலீசுக்கு சென்று, ஊர்மக்கள் தங்களை தாக்கிவிட்டதாக முறையிட்டார்கள்.
அத்துடன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பொன்னர் உட்பட 30 பேர் மீது புகாரையும் தந்தனர்.. இதையடுத்து, அரசு பணியாளர்களை தாக்கியது, அரசு பணியை செய்ய விடாமல் தடுத்தல், வன உயிரின வேட்டை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசாரும், இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
பரபரப்பு: மற்றொருபக்கம், ஊர்மக்களால் தாக்கப்பட்ட வனத்துறையினர் கோர்ட்டுக்கும் ஓடினார்கள்.. வன உயிரின வேட்டை தொடர்பாக ஆத்தூர் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஊராட்சி துணைத் தலைவர் பொன்னர் உட்பட 8 பேர் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். ஒருபக்கம் போலீஸ், இன்னொரு பக்கம் கோர்ட் என இரு தரப்பிலுமே இதை பற்றின வழக்கு துரிதமாகி உள்ளது. இதனால், சேலம், பெரம்பலூர் என 2 மாவட்ட எல்லைகளிலுமே பரபரப்பு தொற்றி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications