விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு ஏன்? - தவெகவினருக்கு சேலம் காவல்துறை கொடுத்த விளக்க கடிதம்!
சேலம்: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சேலத்தில் அடுத்த மாதம் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில் சேலம் போலீசார் அதற்கு அனுமதி மறுத்துள்ளனர். தவெக சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில், அனுமதி மறுத்துள்ள காவல்துறை, அனுமதி மறுத்ததற்கான காரணங்களை விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், செப்டம்பர் 13 ஆம் தேதி தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கினார். அதன் பிறகு, வாரம்தோறும் சனிக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று பொதுமக்களை சந்திக்க திட்டமிட்டு அடுத்தடுத்த வாரங்களில் திருச்சி உட்பட அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 4 மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

செப்டம்பர் 27 தேதி நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் மூன்றாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார். கரூர் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இத்துயர சம்பவத்திற்கு பிறகு தவெக தனது பிரச்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இந்நிலையில் கரூர் துயரச் சம்பவம் நடந்து சுமார் 2 மாதங்களில் கழித்து தவெக மீண்டும் பிரச்சார வேலைகளில் இறங்கியுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் மட்டுமே இருப்பதால் டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் அடுத்த பிரச்சாரத்தை நடத்த தவெக முடிவு செய்தது.
அதற்காக அனுமதி கேட்டு தவெகவின் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் பார்த்திபன் நேற்று சேலம் நகர காவல் ஆணையர் அனில் குமார் கிரியிடம் மனு அளித்தார். ஆனால் விஜய் சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
சேலம் மாநகர காவல்துறை, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் டிசம்பர் 4-ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த பிரச்சார நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து, விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளது. கடிதத்தில் மறுப்புக்கான முக்கிய காரணங்களாக இரண்டு விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. டிசம்பர் முதல் வாரத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பெரும்பாலான போலீஸார் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படுவதால், சேலத்தில் போதிய போலீசை ஒதுக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தவெக தாக்கல் செய்த மனுவில் "நிகழ்ச்சியில் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள், வெளி மாவட்டங்களில் இருந்து எத்தனை பேர் வருவார்கள்" என்ற தெளிவான எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுள்ளது. இந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இனி வரும் காலங்களில் இதுபோன்ற பெரிய மக்கள் சந்திப்பு அல்லது பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் நான்கு வாரங்களுக்கு முன்னதாகவே அனுமதி கோரி மனு அளிக்க வேண்டும் என்று தவெகவுக்கு அறிவுறுத்தியுள்ளது. முன்கூட்டியே தெரிவித்தால் போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய முடியும் என்றும் காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, தமிழக காவல்துறை பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள் மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகளுக்கு மிகக் கடுமையான நிபந்தனைகளை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்?












Click it and Unblock the Notifications