அடப்பாவமே.. சாக்லெட் வாங்கித்தர தாய் மறுப்பு.. பிறந்த நாளன்று +1 மாணவி தற்கொலை.. சேலத்தில் ஷாக்!
சேலம் : சேலம் அருகே, பிறந்த நாளுக்கு சாக்லெட் வாங்கித்தர தாய் மறுத்ததால், விரக்தியடைந்த பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே 12 ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அதன் பின்னர் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், பிறந்த நாளுக்கு சாக்லெட் வாங்கித்தர தாய் மறுத்ததால், பிளஸ்-1 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று, கன்னங்குறிச்சியில் நிகழ்ந்துள்ளது.

பிறந்த நாளுக்கு சாக்லெட்
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி, சரவணா நகரை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரின் மகள் தமிழ்நேயா என்பவர், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். தமிழ்நேயாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், பிறந்த நாள் கொண்டாடுவது குறித்து, காலையில் தனது தாயுடன் பேசியுள்ளார். பிறந்த நாளன்று, உறவினர்கள் மற்றும் தனது பள்ளி தோழிகளுக்கு சாக்லெட் கொடுக்க வேண்டும் என்று தாயிடம் சாக்லெட் வாங்கித் தருமாறு தமிழ்நேயா கேட்டுள்ளார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தாய் ராஜேஸ்வரி, சிறு குழந்தைகள் போல் பிறந்த நாளுக்கு சாக்லெட் கேட்கிறாயே? ப்ளஸ் - 1 படிக்கும் நீ என்ன சிறு குழந்தையா? என கூறியுள்ளார். இதனால், தாயுக்கும், மகளுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மாணவி தூக்கிட்டு தற்கொலை
தன்னுடைய பிறந்த நாளுக்கு சாக்லெட் வாங்கி தருமாறு ஆசையாக கேட்டதற்கு பெற்ற தாயே மறுப்பு தெரிவித்து விட்டாரே என்று நினைத்து தமிழ்நேயா மனமுடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியின் உச்சத்தில் இருந்த அவர், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்களும், உறவினர்களும், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். எனினும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவி தமிழ்நேயா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவலின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக, மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிளஸ்-1 மாணவி
பிறந்த நாளை பள்ளி தோழிகளுடன் உற்சாகமாக கொண்டாட சாக்லெட் வாங்கித் தருமாறு கேட்ட பிளஸ்-1 மாணவி, சாக்லெட் வாங்கித் தர தாய் மறுப்பு தெரிவித்ததால், விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications