"அன்புமணிதான் உன்னை கொல்ல சொன்னார்" னு சொல்லி 15 பேர் வந்தனர்! பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு புகார்
சேலம்: அன்புமணியின் ஆதரவாளர்கள் என்னை கொலை செய்ய முயற்சி செய்தனர் என பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். கத்தியுடன் வந்த 3 பேர் "அன்புமணிதான் உன்னைக் கொல்ல சொன்னார்" என வந்தனர் என்றும் அவர்கள் தெரிவித்ததாக ராமதாஸ் ஆதரவாளரான அருள் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்த வடுகம்பட்டி பகுதியில் பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 50-க்கும் மேற்பட்ட கும்பல், இந்த தாக்குதலில் ஈடுபட்டது.

பாமகவில் அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. அருளின் கார் தாக்கப்பட்டு கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் பேசுகையில், துக்க வீட்டில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம்.
அப்போது சோளக்காட்டிற்குள் மறைந்திருந்தவர்கள் காரை நிறுத்தி எங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். என்னை கொலை செய்யும் நோக்கில் திட்டமிட்டு தாக்குதல் நடத்தியதில் 6 கார்கள் சேதமடைந்தன. அன்புமணியின் ஆதரவாளர்களே இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். அன்புமணியின் டீசன்ட் அன்ட் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ் இதுதானா? பொதுக் குழு கூட்டிய நாளில் இருந்து எங்களை மிரட்டி வருகிறார்கள். ஒவ்வொரு வண்டியாக தாக்கினார்கள்.
என்னை கொலை செய்ய அன்புமணிதான் ஆட்களை அனுப்பியுள்ளார். அவரால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் உள்பட 15 பேர் ஆயுதங்களுடன் திடீரென தாக்கினர். கத்தியுடன் வந்த 3 பேர் "அன்புமணிதான் உன்னைக் கொல்ல சொன்னார்" என வந்தனர்.
என்றைக்கோ போகும் உயிர் ராமதாஸ் மகன் கையால் போகட்டும் என காரை விட்டு இறங்க பார்த்தேன். ஆனால் உடன் இருந்தவர்கள் என்னை இறங்கவிடாமல் தடுத்துவிட்டனர் என அருள் தெரிவித்துள்ளார். தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள், எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அத்துடன் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பாமக எம்எல்ஏ அருளின் ஆதரவாளர்கள் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். பாமக எம்எல்ஏ அருளின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications