Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Anbumani: என்னை சீண்டினால்! அன்புமணி பற்றி பல உண்மைகளை சொல்வேன்- அருள் எம்எல்ஏ மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சேலம்: என்னை சீண்டிக் கொண்டே இருந்தால் அன்புமணி ராமதாஸ் குறித்து பல உண்மைகளை வெளியே சொல்வேன் என பாமக எம்எல்ஏ அருள் மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் பாமக நிர்வாகி அறிவுச் செல்வன் எப்படி இறந்தார் என்பது குறித்தும் விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.

சேலம் வாழப்பாடி அருகே பெத்தநாயக்கன்பாளையம் பாமக ஒன்றியச் செயலாளர் சத்யராஜின் தந்தை தர்மராஜ் இறப்பிற்கு அஞ்சலி செலுத்திவிட்டு வரும் வழியில் எம்எல்ஏ அருளின் காரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரது கார் மீது தாக்குதல் நடத்தினராம்.

arul anbumani ramadoss pmk

இதுகுறித்து அருள் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளரின் தந்தை இறப்பிற்கு அஞ்சலி செலுத்த சென்றிருந்தோம். போய்விட்டு வரும் வழியில் சோளக்காட்டில் அன்புமணியால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ், சடையப்பன் உள்ளிட்ட 15 பேர் திடீரென வந்து காரை தாக்கினார்கள்.

பொதுக் குழு

நாங்கள் 25 கார்களில் 150 பேர் வரை சென்றிருந்தோம். கற்களால் காரை அடித்தார்கள். உடனே நாங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டோம். சேலத்தில் பாமக பொதுக் குழு கூட்டத்தை நடத்தியது அன்புமணியால் தாங்க முடியவில்லை.

வன்னியர் சங்கம் போல்

இதில் வன்னியர் சங்க காலத்தில் ராமதாஸுக்கு எப்படிப்பட்ட வரவேற்பு இருந்ததோ அது போல் வரவேற்பு கிடைத்தது. நடைப்பயணமாக வந்த போது கட்டுக்கடங்காத கூட்டம் வந்தது. இந்த ஆர்ப்பரிப்பான கூட்டத்தை பார்த்ததும் அவர்களால் தாங்க முடியவில்லை.

அருளை கொல்லணும்

இந்த பிரம்மாண்ட கூட்டம் நடத்தியதற்கு யார் காரணம், அருள்தான், உடனே அருளை கொன்றுவிடுங்கள் என அன்புமணி உத்தரவிட்டுள்ளார். கற்களால் தாக்கியவர்கள் எனது கார் நோக்கி 3 பேர் வந்தனர். கையில் பெரிய கத்தி, இரும்பு பைப்புகளை வைத்திருந்தனர்.

அன்புமணியே சொல்லிட்டாரு

"டேய் அன்புமணி உன்னை கொல்ல சொல்லிவிட்டார். உன்னை கொல்றோம்டா" என சொன்னார்கள். டீசன்ட் மற்றும் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ் என கூறி நாட்டை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அன்புமணி, என்னை கொல்ல சொன்னதாக அந்த ரவுடிகள் சொன்னார்கள். உடனே என்னை நம் பசங்க காப்பாற்றினார்கள்.

நான் எம்மாத்திரம்?

பெற்ற தந்தையையே கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் செயலாற்றிக் கொண்டிருக்கிற அன்புமணிக்கு, நான் எம்மாத்திரம்? பெற்ற தந்தை, 36 வயதில் மத்திய அமைச்சராக்கி, 50 ஆண்டுகாலம் உழைத்து உருவாக்கிய கட்சியின் தலைவராகவும் நியமித்த தந்தையையே கொலை செய்ய வேண்டும் என்ற கொடூர சிந்தனையுடைய அன்புமணி என்னை கொல்றதுக்கு நான் யார்? நான் என்ன இந்த கட்சியை உருவாக்கியவனா?

அறிவுச்செல்வன் கொலைக்கு காரணம்

25 ஆண்டுகளாக தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். "அன்புமணி வாழ்க, அன்புமணி வராரு"னு சொல்லி ஊர் ஊராக போய் கொடியேற்றியிருக்கிறோம். அந்த ஏற்பாடுகளை நானும் அறிவுச்செல்வனும் செய்தோம். இப்போது அறிவுச்செல்வன் உயிருடன் இல்லை.

என்னை சீண்டினால்

அறிவுச்செல்வன் கொலைக்கான காரணத்தையும் விரைவில் வெளியிடுவேன். இது போல் என்னை சீண்டிக் கொண்டே இருந்தால் அன்புமணி பற்றி பல உண்மைகளை சொல்வேன். நான் அவர் கூடவே இருந்தவன்.

நான் பயப்பட மாட்டேன்

என்னை மிரட்ட வேண்டாம். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். ராமதாஸ் பள்ளியில் படித்த மாணவன் நான். கல்லெடுத்து அடித்து கத்தியை காட்டினால் நான் பயந்துடுவேனா என்ன? இது ஜனநாயக நாடு, மன்னராட்சி இல்லை.

அன்புமணியால் என் உயிர் போகட்டும்

நியாயம், நீதி, நேர்மை, சட்டம் ஒழுங்கெல்லாம் இருக்கிறது. நான் காரில் இருந்து இறங்க முயற்சித்தேன். என் உயிர் என்றைக்காவது போக போகிறது. அது ராமதாஸ் மகன் அன்புமணியால் போகட்டுமே! ஆனால் எனது ஆதரவாளர்கள் என்னை இறங்கவிடவில்லை.

கொன்றுவிடுவார்

தமிழக காவல்துறை உரிய நடவடிக்கையை எடுப்பார்கள் என நம்புகிறேன். என்னை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அன்புமணி, அந்த ரவுடி பசங்களை அனுப்புறாருன்னா ரொம்ப வருத்தமா இருக்கு. இவர் மேடைக்கு மேடை சொல்றாரு நான் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வேன், இதை செய்வேன்னு! இவர் ஆட்சிக்கு வந்தால் கூட இருப்பவர்களை கொன்றுவிடுவார்.

ராமதாஸிடம்தான் பாமக

தமிழக மக்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல! பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸிடம்தான் இருக்கிறது. வாக்காளர்களும் அவர் பக்கம் நிற்கிறார்கள். இவ்வாறு அருள் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+