வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு! இந்தியா இதுவரை பார்க்காத போராட்டம் நடக்கும்! அன்புமணி அலர்ட்!
சேலம்: வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை என்றும் நியாயமான காரணங்களை மட்டுமே நீதிமன்றம் கேட்பதாகவும் இதற்கு உண்டான தரவுகளை எடுப்பதற்கு ஆறு மணி நேரம் போதும் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அன்புமணி பேசியதாவது;
''வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை இன்னும் ஒரு மாதத்தில் சட்டமாக கொண்டு வாருங்கள். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.

வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்க எந்த தடையும் உச்சநீதிமன்றம் விதிக்கவில்லை. நியாயமான காரணங்களை மட்டுமே அவர்கள் கேட்கிறார்கள்.
இதற்கு உண்டான தரவுகளை எடுப்பதற்கு ஆறு மணி நேரம் தான் ஆகும். ஆனால் அதை எடுப்பதற்கு இவர்களுக்கு ஒரு வருடமாக மனது வரவில்லை.
தயவு செய்து தமிழக முதலமைச்சர் இன்னும் ஒரு மாதத்திற்குள் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை கொடுங்கள். இல்லையேல் என்னுடைய தம்பிகளை என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஏனென்றால் இது சமூக நீதிப் பிரச்சனை. ஜாதி பிரச்சனை கிடையாது.
நீங்கள் தானே சொன்னீர்கள் சமூக நீதி என்றால் திமுக என்று. ஒரு வருஷம் ஆகியும் உங்களால் இந்த சமூகநீதி பிரச்னையை தீர்க்க முடியவில்லை. நினைத்துப் பாருங்கள்.
என்னுடைய தம்பிகள் போராட்டத்துக்கு தயாராகி விட்டார்கள். அப்போது நடந்த போராட்டம் வேறு, இப்போது நடந்தால் வேறு விதமாக நடக்கும். இந்தியா பார்க்காத ஒரு போராட்டம் தமிழ்நாட்டில் நடக்கும்.
அதை தவிர்க்க வேண்டும் என்றால், நாங்கள் கேட்கின்ற சமூகநீதி பிரச்சினையை தீர்த்து வையுங்கள். வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீட்டை கொடுங்கள்" இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications