ஜஸ்ட் மிஸ்.. ஒரே ஜம்பில் அன்புமணி எஸ்கேப்! “வருங்கால முதல்வர்” என்றதும் டமாரென சரிந்த பாமக விழா மேடை
சேலம்: வாழப்பாடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்ட கட்சி கொடியேற்று விழா மேடை சரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேடை கீழே சரிவதை முன்கூட்டியே சுதாரித்த அன்புமணி கீழே குதித்து காயங்களின்றி தப்பினார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக கொடியேற்று விழா நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் உரையாற்றுவதற்காக வருங்கால முதல்வர் என்று அச்சிடப்பட்ட பேனருடன் சிறிதாக மேடை ஒன்று பாமகவினரால் அப்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்தது.
அதில் ஏறிய அன்புமணிக்கு வருங்கால முதல்வர் என்ற முழக்கமிட்டபடி பாமகவினர் மாலை அணிவித்து வரவேற்றனர். சிறிதாக அமைக்கப்பட்டு இருந்த அந்த மேடையில் அன்புமணிக்கு மாலை அணிவிப்பதற்காக ஏராளமான பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏறி நின்றுகொண்டு இருந்தார்கள்.

கீழே குதித்து தப்பிய அன்புமணி
அப்போது எடை தாங்க முடியாமல் பாமக விழா மேடை பின்பக்கமாக கீழே சரிந்து விழுந்தது. மேடை லேசாக சரிவதை முன்கூட்டியே சுதாரித்துக்கொண்ட அன்புமணி, அருகில் நின்ற தொண்டர்களின் தோள்களில் கை வைத்து கீழே குதித்து காயங்கள் ஏதும் இன்றி தப்பினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அன்புமணி மற்றும் மேடையில் இருந்த பாமக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு காயங்கள் ஏதும் ஏற்பட்டு உள்ளதா என விசாரித்தனர்.

போக்குவரத்து பாதிப்பு
ஆனால், நல்வாய்ப்பாக யாருக்கும் காயங்கள் பெரிய அளவில் ஏற்படவில்லை. இதனை வீடியோ எடுக்கக்கூடாது எனவும், செல்போன் மற்றும் கேமராவை ஆஃப் செய்யுமாறும் பாமக தொண்டர்கள் சத்தமிட்டனர். அன்புமணி கலந்துகொண்ட விழா மேடை சரிந்ததால் அப்பகுதியின் பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள், லாரிகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஊர்ந்தபடி மெதுவாக நகர்ந்தன.

அன்புமணி பேச்சு
இதனை தொடர்ந்து அங்கிருந்து கட்டில் ஒன்றை போட்டு அதில் ஏறி நின்றபடி அன்புமணி ராமதாஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், "தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி வித்தியாசமான கட்சியாக செயல்பட்டு வருகிறது. ஆட்சி அதிகாரத்திற்கு வராமலேயே, அதாவது வருவதற்கு முன்பாகவே தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கு பல சாதனைகளை செய்து வருகிறது. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆட்சி அதிகாரம் திமுக, அதிமுக என்று 55 ஆண்டுகாலம் மாற்றி மாற்றி ஆட்சி செய்கிறார்கள்.

பாமக செயல்திட்டங்கள்
ஆனால், கடந்த 15 - 20 ஆண்டுகளில் நமது செயல்திட்டங்களை அவர்கள் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். நாம் சொல்லும் திட்டங்களை ஒன்று திமுக செயல்படுத்துகிறது. அல்லது அதிமுக செயல்படுத்தியது. தமிழ்நாட்டிற்கு வேளாண் பட்ஜெட் வேண்டும் என்று 16 ஆண்டுகளாக பாமக சொல்லி வந்தது. இறுதியாக கடந்த ஆண்டு திமுக அரசு வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் கொண்டு வந்தது.

ஆன்லைன் ரம்மி
தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக பல போராட்டங்களை நடத்தியது. அதை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ரத்து செய்தார். ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள் இப்போது கோரிக்கை விடுத்தாலும் முதலில் கோரிக்கை வைத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது வலியுறுத்தி சட்டத்தை கொண்டு வர சொன்னது பாமகதான்." என்றார்.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications