Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்வு மையம் மாறி வந்ததால் கண்கலங்கி நின்ற மாணவி.. போலீசார் செய்த உதவி.. சேலத்தில் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சேலம்: கிருஷ்ணகிரியை சேர்ந்த கட்டுமான தொழிலாளியின் மகள், தருமபுரியில் உள்ள கல்லூரியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நிலையில் தவறுதலாக சேலத்தில் உள்ள கல்லூரி தேர்வு மையத்திற்கு வருகை தந்தார். இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் கண்கலங்கியபடி நின்ற அந்த மாணவியை காவலர் ஒருவர் காரில் அழைத்து சென்று நீட் தேர்வு எழுத உதவி செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நடத்தப்படும் நீட் தேர்வு இன்று நடக்கிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஒரே கட்டமாக இன்று நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகிறார்கள். இதேபோன்று தேர்வு மையங்களை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை, கோவை, சேலம், தர்மபுரி, திருப்பூர், தஞ்சாவூர் உள்பட தமிழகத்தின் 31 மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

NEET Exam Salem Krishnagiri

நீட் கட்டுப்பாடுகள்

இதில், சென்னையில் மட்டும் 44 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நீட் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக மாணவ மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேர்வு மையத்திற்கு 1.30 மணிக்கு முன்பாக வந்துவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

தேர்வு மையம் மாறி வந்த மாணவி

இதன்படி எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சோதித்து பார்த்துக்கொண்டு மாணவ மாணவிகள் தேர்வு மையத்துக்கு காலையில் இருந்தே வர தொடங்கினர். தேர்வு மையங்களில் அலுவலகர்கள் கடும் சோதனைக்கு பிறகே மாணவர்களை அனுமதித்து வந்தனர். வளையல்கள், தோடுகள், செயின்கள் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றை மாணவ மாணவிகள் அணிந்து வரவில்லை.

இந்த நிலையில், கிருஷ்ணகிரியை சேர்ந்த மாணவி ஒருவர், தருமபுரியில் நீட் தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு பதிலாக சேலத்தில் உள்ள கல்லுரிக்கு நீட் தேர்வு எழுத வந்துள்ளார். தேர்வு மைய எண்ணுடன் பொருந்தாததால் செக் செய்து பார்த்த போது அந்த மாணவிக்கு தருமபுரியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அந்த மாணவி கண்ணீர் விட்டு அழுதார்.

உதவிக்கரம் நீட்டிய காவலர்

எப்படியாவது தேர்வு எழுத வேண்டும் என எண்ணி கண் கலங்கியபடி நின்றார். எனினும் அந்த மாணவி இன்று தேர்வு மையத்துக்கு முன்னதாகவே வந்துவிட்டார். அழுதுகொண்டே இருந்த அந்த மாணவியை பார்த்த போலீசார் இது குறித்து கேட்டனர். அப்போது நடந்ததை மாணவி தெரிவித்தார். உன் தந்தைக்கு போன் செய்ய முடியுமா, அவர் என்ன வேலை செய்கிறார் என்று போலீசார் கேட்டனர். அப்போது அவர் கட்டிட மேஸ்திரி என்று கூறினார்.

இதையடுத்து கண்ணீரோடு செய்வதறியாமல் கலங்கி நின்ற அந்த மாணவியை போலீசாரே காரில் கொண்டு சென்று விட முடிவு செய்தனர். இதன்படி ஒரு காரை ஏற்பாடு செய்து காவலர் ஒருவர் அந்த மாணவியை தருமபுரியில் உள்ள நீட் தேர்வு மையத்துக்கு பத்திரமாக அழைத்து சென்றனர். போலீசாரின் இந்த செயல் அங்குள்ளவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

நீட் தேர்வு

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் எனும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்பட்டு மாணவ மாணவிகள் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் தான் நடப்பு 2025-2026 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+