பாகப்பிரிவினை.. சேலத்தில் 16 ஏக்கர் நிலத்தை வாரிசுக்கு தந்த பெற்றோர்.. உறுத்திய சொத்துகள்! அதுக்கு?
சேலம்: தமிழகத்தில் நாளுக்கு நாள் தற்கொலைகள் பெருகி வரும் சூழலில், வன்முறைகளும் அதிகரித்தபடியே உள்ளன.. குறிப்பாக இளம் தலைமுறையினரே இந்த தற்கொலைகள், கொலை உள்ளிட்ட வன்முறைகளுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.. நேற்றுமுன்தினம்கூட, ஒரே நாளில் 2 கொலைகள் சொத்துக்காக நடந்து, இப்போதுவரை மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகின்றன.. இவை தொடர்பான நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா என்பவருக்கு 40 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் சரண்யா.. தேனியை சேர்ந்தவர்.. இந்த தம்பதிக்கு திருமணமாகி 20 வருடங்களாகின்றன. ஆர்த்தி, சங்கீதா என்ற மகள்களும் இவர்களுக்கு உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, சென்னை பல்லாவரத்தில் ஓட்டல் ஒன்றில் சமையல்காரராக வேலைக்கு சேர்ந்தார் ராஜா.. இதனால் அந்த பகுதியிலேயே வாடகை வீட்டில் குடியிருந்து வந்துள்ளனர்..
இதனிடையே, தேனியில், மனைவிக்கு சொந்தமான பூர்வீக நிலத்தை, அவரது அப்பா அழகர்சாமி (55), விற்றுவிட்டார்.. ஆனால், சரண்யாவுக்கு பணம் எதுவும் தரவில்லை இது ராஜாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது..
மாமனார் - மருமகன்
இப்படிப்பட்ட சூழலில், மகளை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் தேனியில் இருந்து அழகர்சாமி வந்திருக்கிறார்.. அப்போது, சொத்து விற்ற பணத்தில் பங்கு எங்கே? என்று மாமனாரை கேட்டுள்ளார் ராஜா.. இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜா, வீட்டின் அருகே கிடந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து, மாமனார் தலையில் ஓங்கி அடிக்கவும், அழகர்சாமி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். சொத்து பிரச்னையில் மாமனாரை, மருமகன் அடித்துக் கொன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது சம்பந்தமான விசாரணை தற்போது நடந்து கொண்டிருக்கிறது.
16 ஏக்கர் நிலம்
இதேபோல சேலத்திலும் சொத்து பிரச்சனை நடந்து, அப்பகுதி மக்களை பதற வைத்துள்ளது.. பூலாம்பட்டி அருகே மொரசப்பட்டி அம்மன் குட்டூர் பகுதியை சேர்ந்த தம்பதி பெருமாள் - செல்லம்மாள்... இதில் பெருமாளுக்கு 87 வயதாகிறது.. செல்லம்மாளுக்கு 87 வயதாகிறது.. இவர்களது 2 மகன்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இதில் மூத்த மகன் குப்புசாமிக்கு குழந்தை இல்லை என்பதால், பெற்றோருடனேயே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பெருமாள் தன்னுடைய பெயரில் இருந்த 16 ஏக்கர் நிலத்தில், 2 மகன்களுக்கும் தலா 7 ஏக்கர் நிலத்தினை பிரித்து தந்துவிட்டு, மிச்சமுள்ள 2 ஏக்கர் நிலத்தினை தங்களது வாழ்வாதாரத்திற்காக வைத்துக்கொண்டார்..
கண்ணை உறுத்திய 2 ஏக்கர் நிலம்
ஆனால், இது மூத்த மகன் குப்புசாமிக்கு பிடிக்கவில்லை.. அத்தனை நாளும் பெற்றோரை நன்றாக கவனித்து கொண்டிருந்தவர், சொத்து பிரித்து தந்தபிறகு, அதிலும் 2 ஏக்கர் நிலத்தை பெற்றோரே வைத்து கொண்டதுமே, சரிவர கவனிக்காமல் விட்டுவிட்டார்.. சாப்பாடும் ஒழுங்காக போடாமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
ஆனால், அந்த இரண்டு ஏக்கர் நிலத்தில், ஒரு ஏக்கர் நிலத்தினை கடந்த மாதம் எழுதி வாங்கிக்கொண்டார் குப்புசாமி.. அதற்கு பிறகும்கூட, வயதான பெற்றோரை இரவில் வீட்டிற்குள் படுக்கவிடாமல், வெளியில் வராண்டாவில் தங்க வைத்து டார்ச்சர் செய்திருக்கிறார் குப்புசாமி.. அத்துடன், அவர்களை தாக்கியும், கெட்ட வார்த்தைகளால் திட்டியும் வசைபாடி வந்திருக்கிறார்..
ரவுண்டு கட்டிய போலீஸ்
நாளுக்கு நாள் குப்புசாமியின் சித்ரவதையை தாங்க முடியாத வயதான பெற்றோர், சேலம் பூலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துவிட்டனர்..
இந்த புகாரின்பேரில் விசாரணையும் நடந்தது.. அப்போதுதான், பெருமாள், செல்லம்மாள் இருவரையுமே வயதைகூட பொருட்படுத்தாமல் குப்புசாமி கொடுமைப்படுத்தியதை அறிந்து போலீசார் அதிர்ந்தனர்.. இறுதியாக குப்புசாமியை கைது செய்த போலீசார், அவரை ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி












Click it and Unblock the Notifications