செல்போன் டவரே கிடைக்காத ஜருகுமலை.. சிறுதானியங்கள் நிறைந்த கஞ்சமலை.. ஆரஞ்ச் விலையும் சேர்வராயன்
சேலம்: கிழக்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட "மா"நகரம் சேலம் ஆகும். இங்கு காணப்படும் சேர்வராயன் மலை மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
சேலத்தின் வடக்கே சேர்வராயன் மலை உள்ளது. இந்த மலை சேலம் மாவட்டத்தில் மிக உயரமான மலையாகும். அது போல் கிழக்கில் கோதாமலையும், தெற்கில் ஜருகுமலையும் தென்மேற்கில் கஞ்சமலையும் காணப்படுகிறது.
இந்த பகுதிகளை சுற்றி காவிரியின் கிளையாறான திருமணிமுத்தாறு பாய்கிறது. சேர்வராயன் மலையின் உயரம் 4000 - 5000 அடி வரை இருக்கும்.

இயற்கையின் ஊற்று
இந்த மலையில் இயற்கையின் ஊற்றுக்கண்ணாக நிறைய மரங்களும் மூலிகை செடிகளும் காட்டு விலங்குகளும் காணப்படுகின்றன. இங்கு காபி, சில பல வகைகள் விளைவிக்கப்படுகின்றன. இந்த மலையில்தான் ஏற்காடு எனும் சுற்றுலா தளம் காணப்படுகிறது. இந்த மலை சேர மன்னன் நிலமாகவும் அவர் ஆண்ட பகுதியாகவும் இருந்திருக்கும் என தெரிகிறது.

சேர்வராயன் மலை
இதனால்தான் இந்த மலைக்கு சேர்வராயன் என்ற பெயர் வந்திருக்கும் என்கிறார்கள். ஒழுங்கற்ற பீடபூமியில்தான் ஏற்காடு உள்ளது. இங்கு வடக்கில் சன்னியாசிமலை என கூறப்படும் டஃப் மலை இருக்கிறது. சேர்வராயன் மலைகளில் ஜெரேனியம் பச்சோலி, பெப்பர் மென்ட், யூகாலிப்டஸ், சிற்றடோரா ஆகிய வாசனை செடிகள் உள்ளன. இந்த செடிகள் வளர தேவையான தட்பவெப்பநிலை இந்தியாவிலேயே இங்குதான் காணப்படுகிறது.

சுண்ணாம்பு கல்
இந்த மலையில் சுண்ணாம்புக் கல், பாக்சைட்டும் உள்ளன. கஞ்சமலையின் பரப்பளவு 18.5 சதுர கி.மீ. ஆகும். இதன் உயரம் 3200 அடியாகும். காவிரியின் கிளை நதிகளான சர்பங்கா, திருமணிமுத்தாறு ஆகியவை கஞ்சமலையை சுற்றி பாய்கின்றன. இந்த மலையில் சித்தர்கள் வாழ்வதாக ஐதீகம். இங்கு நிறைய கோயில்கள் காணப்படுகின்றன.

இரும்பு தாது
சித்தேஸ்வரன் மற்றும் காளியம்மன் கோயில்கள் முக்கியமான கோயில்களாகும். மலை உச்சியில் சித்தர், பெருமாள், கன்னிகள், சிவன் ஆகியோருக்கு ஆலயங்கள் உள்ளன. இந்த மலையில் இரும்பு தாது காணப்படுகிறது. இந்த மலையை ஏற 3 மணி நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. இந்த ஜருகுமலையில் உள்ள மலைகிராமங்களில் செல்போன் டவர் கிடைக்காததால் கொரோனா ஆன்லைன் வகுப்புகளின் போது மலையின் உச்சிக்கு சென்று மாணவர்கள் படித்தனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ரூ.140 சரக்கு பாட்டிலில் அரசுக்கு மட்டும் இவ்வளவு லாபமா? தலை சுற்ற வைக்கும் டாஸ்மாக் வரி கணக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications