பாருங்க யாருன்னு.. சக்கர நாற்காலியில்.. மாற்று திறனாளியை உட்கார வைத்து வாசல்வரை.. சபாஷ் கலெக்டர்
சேலம் மாவட்ட ஆட்சியரின் மனிதாபிமானம் மக்களின் பாராட்டை பெற்றுவருகிறது
சேலம்: மனு அளித்தவுடன் மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி வழங்கி, வாசல் வரை தள்ளி வந்து வாகனத்தில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார் சேலம் கலெக்டர்... இந்த செயல்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களை நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.. இதையடுத்து, தமிழகத்தின் மாவட்டங்களில் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடந்து வருகின்றன.
அந்த வகையில், சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது...

கோரிக்கை
இதில் ஓமலூரை அடுத்த காடையாம்பட்டி டேனிஸ்பேட்டை ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வரதராஜ் என்பவர் வந்திருந்தார்.. இவருக்கு 22 வயதாகிறது.. பிறவியிலேயே இரு கைகள் மற்றும் இரண்டு கால்கள் பாதித்த மாற்றுத்திறனாளி ஆவார். இந்நிலையில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தனக்கு சக்கர நாற்காலி வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்து இருந்தார்...

கோரிக்கை
உடனே மனுவை பரிசீலித்த கலெக்டர் செ. கார்மேகம், உடனடியாக அவருக்கு சிறப்பு சக்கர நாற்காலியை வழங்கினார்... அதுமட்டுமல்ல, வரதராஜை அந்த சிறப்பு சக்கர நாற்காலியில் ஏற்றிவைத்து வாசல்வரை தள்ளி வந்தார் கலெக்டர். அத்துடன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வாகனம் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்...

பாராட்டுக்கள்
இரு சக்கர வாகனத்தை பெற்றுக் கொண்ட வரதராஜனும், கண்கலங்கி கலெக்டருக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்தார்.மனு தந்த உடனேயே இரு சக்கர சிறப்பு வாகனத்தை தந்ததுடன், வாசல்வரை வரதராஜனை அந்த வாகனத்தில் வைத்து தள்ளி கொண்டு வந்த கலெக்டரை அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கலெக்டரின் இந்த செயலுக்குதான் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மக்கள் நலத்திட்டம்
சமீபத்தில்தான் ஆட்சியராக கார்மேகம் பொறுப்பேற்றிருந்தார்.. அன்று முதலே மக்கள் நலத்திட்டங்களிலும், மக்கள் நலன்சார்ந்த விஷயங்களிலும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, சேலம் மாநகரின் சாலையோரங்களில் குளிரிலும், கொசுக்கடியிலும், பசியால் வாடும் ஆதரவற்றவர்களை மீட்க தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு வருவது பொதுமக்களின் பாராட்டை பெற்று வருகிறது.. இந்நிலையில், இன்றைய தினம் கலெக்டரின் மனிதாபிமானம் சேலம் மக்களின் கவனத்தை மேலும் ஈர்த்து வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications