இதுக்கு மேல என்னங்க வேணும்? விவசாயிகளுக்கு ’லட்டு’ போல் அறிவிப்பு! சேலம் கலெக்டர் சொன்ன தகவல்!
சேலம்: நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் எனவும், சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் சம்பந்தப்பட்ட விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்கள் மூலம் நுண்ணீர் பாசன கருவிகள் விவசாயிகளின் வயல்களில் அமைக்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் வேளாண் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு வேளாண் துறை மட்டுமல்லாது தோட்டக்கலை பயிர்கள் துறை, மலைப் பயிர்கள் துறை, பட்டு வளர்ச்சித் துறை மற்றும் வனத்துறை சார்பிலும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தை பொருத்தவரை தோட்டக்கலைப்பயிர்கள் 1,10,000 எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் தென்னை, மா, வாழை, கொய்யா, நெல்லி, திராட்சை, வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி, இதர காய்கறிகள், மலர்கள், கண்வலிக்கிழங்கு, காபி, ஏலக்காய் போன்ற பலதரப்பட்ட தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தோட்டக்கலை துறை
தோட்டக்கலைப்பயிர்களின் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்கத்துடனும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்துடன் சொட்டுநீர் பாசனம், நுண்ணீர் பாசனம், பாசன குளம் அமைப்பதற்கான நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கூறியுள்ளார்.
விவசாயிகள் நலத்திட்டம்
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," சேலம் மாவட்ட தோட்டக்கலைதுறை மூலம் செயல்படுத்தப்படும் 2025 2026 ஆம் ஆண்டிற்கான நுண்ணீர் பாசனத் திட்டத்தில் 5841 எக்டர் பொருள் இலக்கீடு மற்றும் ரூ.65.78 கோடி நிதி இலக்கீடு வரப்பெற்று 20 வட்டாரங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நுண்ணீர் பாசனத் திட்டம்
நுண்ணீர் பாசனத் திட்டத்தில் காய்கறி, பழப்பயிர்கள், மரப்பயிர்கள் மற்றும் மலர் போன்ற அனைத்து தோட்டக்கலைபயிர்களுக்கும் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் மூன்று முறைகளில் (சொட்டுநீர் பாசனம், மழைத்தூவான் தெளிப்புநீர்) விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சிறுகுறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் சம்பந்தப்பட்ட விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்கள் மூலம் நுண்ணீர் பாசன கருவிகள் விவசாயிகளின் வயல்களில் அமைக்கப்படும்.
தமிழக அரசு மானியம்
மேலும், நீர் பாசனக் கருவிகளை தானியங்கி முறையில் இயக்க தானியங்கி அமைப்பு சேலம் மாவட்டத்திற்கு 500 எக்டர் இலக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்ட விதிகளின்படி தானியங்கி அமைப்பினை அமைப்பதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.22,000/- மானியமும் இதர விவசாயிகளுக்கு ரூ.18,000/- மானியமும் வழங்கப்படுகிறது. தானியங்கி மூலம் செயல்படுத்துவதால் சொட்டு நீர் பாய்ச்சுவது மிகவும் எளிமையாகவும் வேலையாட்கள் பற்றாக்குறை இல்லாமலும் இருக்கும்.
இணையதள பதிவு
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in:8080/Subsidy/ApplySubsidy இல் செய்தும் அல்லது தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தேவையான ஆவணங்களை கொடுத்து பயன்பெறலாம்" என கூறப்பட்டுள்ளது.
-
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார்












Click it and Unblock the Notifications