மண்டைக்கேறிய மதுபோதை.. தமிழக போலீசார் மீது தாக்குதல்! உ.பி டூரிஸ்டை புரட்டியெடுத்த மேட்டூர் மக்கள்!
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே சுற்றுலா பேருந்தை மறித்து தமிழக மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் சோதனை நடத்தியதால் ஆத்திரமடைந்த வடமாநிலத்தவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட தாக்குதல் நடத்திய பதைபதைக்க வைத்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வட மாநிலங்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் சேலம் காரைக்காடு வழியாக பேருந்துகளில் சுற்றுலா வருகின்றனர். மேட்டூர் அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல இந்த வழியாகத் தான் செல்ல வேண்டும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அவ்வழியாக கர்நாடகாவில் இருந்து அடிக்கடி மதுபாட்டில்களை கடத்தும் சம்பவங்களும் நடக்கிறது. இதன் காரணமாக, மேட்டூர் அருகே தமிழக எல்லையில் காரைக்காடு தமிழ்நாடு காவல்துறையின் மதுவிலக்கு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
சேலம் சோதனை சாவடி:
கர்நாடகாவில் இருந்து நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் தமிழக எல்லையில் உள்ள இந்த சோதனை சாவடியை கடந்து செல்கின்றன. இதேபோல் மற்ற மாநிலங்களை சேர்ந்த வாகனங்களும் இந்த சோதனை சாவடியை கடந்து கர்நாடக மாநிலம் செல்கின்றன. இங்குள்ள சோதனை சாவடியில் மலிவு விலையில் மது , கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் போலீசாரின் வாகன சோதனைகள் அடிக்கடி சிக்கும் நிலையில் தீவிர சோதனை நடத்த மாவட்ட காவல் தலைமை உத்தரவிட்டுள்ளதாக எப்போது கண்காணிப்பு தீவிரமாக இருக்கும்.
வடமாநில பயணிகள்:
இந்நிலையில் வழக்கம் போதுல் மதுவிலக்கு சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த சொகுசு பேருந்தை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருந்து கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கோவிலுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த வாகனத்தை நிறுத்தி கர்நாடக மாநிலத்திற்கு செல்வதற்கான பெர்மிட் இருக்கிறதா என போலீசார் கேட்ட நிலையில் பெர்மிட் இல்லை என்றும், அது இல்லாமலேயே தங்களை அனுமதிக்க வேண்டுமென பேருந்தில் இருந்தவர்கள் கூறியதாக கூறப்படுகிறது.
போலீசார் மீது தாக்குதல்:
போலீசார் மறுத்த நிலையில், இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கோபமடைந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த சிலர் போலீசாரை கடப்பாரையைக் கொண்டு தாக்க முயன்றனர். அவர்களிடம் தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சமாதானம் பேசிய நிலையில் ஆத்திரமடைந்த அவர்கள், தமிழ்நாட்டினரை அவதூறாக பேசியதோடு காவல்துறையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சுகனேஸ்வரன், செந்தில்குமார் ஆகிய இரண்டு காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.
தாக்குதல் நடத்திய கிராம மக்கள்:
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காவல்துறையினருக்கு ஆதரவாக வட மாநிலத்தவர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதை அடுத்து தகவல் அறிந்து சென்ற கொளத்தூர் போலீசார் பொதுமக்களை சமாதானம் செய்ததோடு உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உண்மையிலேயே வாகன அனுமதிக்காக தான் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா எனவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை:
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சுற்றுலா பயணிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது சம்பவத்தில் நான்கு பேர் மட்டுமே ஈடுபட்டதால் அவர்களை கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் மது போதையில் இருந்த நிலையில் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது. சுற்றுலா பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் கடும் பரபரப்பு நிலவும் நிலையில் கூடுதல் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications