Memu Rail: நவ.24 முதல் சேலம் - ஈரோடு இடையே மெமு ரயில் சேவை! எந்தெந்த கிழமைகளில் இயங்கும்?
சேலம்: சேலம்- ஈரோடு இடையே மெமு ரயில் சேவை நாளை மறுநாள் அதாவது நவம்பர் 24 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம்- ஈரோடு இடையே பயணிகள் ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக சேலம் கோட்டம் ரயில்வே நிர்வாகத்திடம் பல முறை மனுக்களையும் தந்திருக்கிறார்கள். ஆனால் தற்போதுதான் அதற்கு நேரம் வந்திருக்கிறது போல!
சேலம் மற்றும் ஈரோடு பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று சேலம் ரயில்வே கோட்டம், மெமு ரயில் சேவையை தொடங்க திட்ட அறிக்கை தயாரித்து ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்தது.
சேலம் ரயில்வே கோட்டம் அளித்த திட்ட அறிக்கைக்கும் ரயில் சேவையை தொடங்குவதற்கும் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக இது தொடர்பான பணிகள் நடந்து வந்த நிலையில் சேலம்- ஈரோடு மெமு ரயில் சேவை வரும் 24 ஆம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'சேலம் - ஈரோடு மெமு பயணிகள் ரயில், வாரத்தில் வியாழக்கிழமை தவிர்த்து மற்ற ஆறு நாட்களிலும் செயல்படும். இந்த ரயில் சேலத்தில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு மகுடஞ்சாவடிக்கு 6.29 மணிக்கும், 6.49 மணிக்கு சங்ககிரிக்கும், காவேரி ஸ்டேஷனுக்கு 7.04 மணி மற்றும் ஈரோடு ஜங்ஷனுக்கு 7.25 மணிக்கும் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் ஈரோடு - சேலம் மெமு பயணிகள் ரயில் வியாழக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு, காவிரி ஸ்டேஷனுக்கு 7.38 மணிக்கும், சங்ககிரி நிலையத்திற்கும் 7.54-க்கும், மகுடஞ்சாவடிக்கு 8.09 மணிக்கும், இறுதியாக சேலம் ஜங்ஷனுக்கு 8.45 மணிக்கும் வந்து சேரும். இந்த மெமு ரயிலில் எட்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன' என குறிப்பிடப்பட்டுள்ளது.
MEMU என்றால் என்ன?
இது மின்சாரத்தில் இயங்கும் ரயில் ஆகும். இதில் இயந்திரப் பெட்டி (Motor Car) மற்றும் பயணிகள் பெட்டிகள் (Trailer Car) ஒருங்கிணைந்திருக்கும். இதனால் ரயிலின் இரண்டு முனைகளில் இருந்தும் இயக்க முடியும்.
சேவை: இந்த ரயில் சேவை வாரத்தில் 6 நாட்கள் (திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு) இயக்கப்படும்.
விடுமுறை நாள்: வியாழக்கிழமை மட்டும் இந்த ரயில் சேவை இருக்காது.
சேலம் மற்றும் ஈரோடு பகுதிகளைச் சுற்றியுள்ள தினசரிப் பயணிகளுக்கு இந்தக் காலை மற்றும் மாலை நேர ரயில் சேவைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications