சேலமே அரண்டுடுச்சு.. போலீசாரை திகைக்க வைத்த விமலாவும், கிருஷ்ணனும்.. தாரமங்கலத்தில் தாறுமாறு மேட்டர்
சேலம்: புதுமண தம்பதியை பார்த்து, தாரமங்கலம் மக்கள் வாயடைத்து போயுள்ளனர்.. போலீசாரே அப்படித்தான் விக்கித்து போனார்கள்.. என்ன நடந்தது ஓமலூரில்?
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ளது மாட்டையாம்பட்டி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் கிருஷ்ணன்.. 54 வயதாகிறது.. இவருக்கு திருமணமாகிவிட்டது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்துவிட்டார்.
10 வருடங்களுக்கும் மேலாகவே மனைவியை பிரிந்து, கிருஷ்ணன் தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.. தன்னுடைய பகுதியிலேயே விசைத்தறி தொழிலையும் நடத்தி வருகிறார்.. இந்நிலையில், இவருக்கு விமலா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.. விமலாவும் இதே ஊரைச்சேர்ந்தவர்தான்.. 24 வயதாகிறது.. படித்த பட்டதாரியும்கூட.

காதல்: அடிக்கடி கிருஷ்ணன் வீட்டுக்கு வந்துசெல்லவும், இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது.. ஆனால், இந்த விஷயம் விமலா வீட்டிற்கு தெரிந்துவிட்டது.. தம்பதி பிரிந்துவிட்டாலும் முறைப்படி டைவர்ஸ் ஆகவில்லை என தெரிகிறது. எனினும், கிருஷ்ணனின் காதல் விவகாரத்தை கேட்டு, அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. இந்த காதலை கைவிடுமபடியும் எச்சரித்துள்ளனர்.
இதனால், வேறுவழியின்றி, விமலாவை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.. இதற்காக, விமலாவின் வீட்டிற்கே சென்ற, அவரை அழைத்துக் கொண்டு, நேராக திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று, அங்கு வைத்து தாலிகட்டினார்..
புதுமண தம்பதி: இதனிடையே, தன்னுடைய மகளை கடத்தி சென்றுவிட்டதாக, விமலாவின் அப்பா, கிருஷ்ணன் மீது தாரமங்கலம் போலீசில் புகார் தந்தார். ஆனால், புதுமண தம்பதி இருவரும், தாராமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கே சென்றுவிட்டார்கள்.. தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு, அங்கேயே தஞ்சமடைந்தனர்..
கிருஷ்ணனை பற்றின கடத்தல் புகார் வந்த, சிறிது நேரத்திலேயே இருவரும் தஞ்சமடைந்ததை பார்த்து போலீசார் அதிர்ந்தனர்.. அதுமட்டுமல்ல, இருவரின் தோற்றத்தையும்கண்டும் மலைத்தனர். 2 பேருக்கும் இடையே, 30 வயது வித்தியாசம் உள்ளதால், போலீசாரும் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தனர். அதற்குள் விமலாவின் பெற்றோர், ஸ்டேஷனுக்கு வந்துவிட்டனர்.
உருக்கமான பேச்சு: மகளை புதுமண கோலத்தில் பார்த்ததுமே கதறி கதறிஅழுதார்கள்.. உருக்கமாக பேசினார்கள்.. கிருஷ்ணனின் வயதை காரணம் காட்டி, அவரை பிரிந்துவிடும்படி சொன்னார்கள்.. வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்துவைப்பதாகவும் சொன்னார்கள்.. ஆனால், எதையுமே விமலா காதில் வாங்கவில்லை.. வாழ்ந்தால் கிருஷ்ணனுடன்தான் என்று, தன் பெற்றோரிடம் உறுதியாக சொல்லிவிட்டார்.
பிறகு போலீசாரும், விமலா மேஜர் என்பதால், அவருடைய வாழ்க்கை துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை சட்டப்படி உள்ளது என்று பெற்றோரிடம் எடுத்து சொன்னார்கள்..
பரபரப்பு: இதனால் நிலைகுலைந்து போன விமலாவின் பெற்றோர், வேறுவழியின்றி அங்கிருந்து கண்கலங்கியபடியே சென்றார்கள்.. ஆனால், கிருஷ்ணனின் மாமியார் வீட்டு நிலவரம் என்ன என்று இதுவரை தெரியவில்லை. எனக்கு 24, உனக்கு 54 என்ற இந்த திருமண செய்தி, தாரமங்கலமே பரபரப்பாகிவிட்டது.












Click it and Unblock the Notifications