சித்தி.. அப்பறம் அம்மா.. அப்பறம் மனைவி.. 3 பெண்களால் அலறிய எடப்பாடி.. விஷயமே தெரியாமல் 108-க்கு போன்
சேலம்: 3 பெண்கள் சேர்ந்து செய்த காரியம், சேலம் எடப்பாடியையே பதற வைத்து வருகிறது.. என்ன நடந்தது சேலத்தில்?
சேலம் மாவட்டம் எடப்பாடி நைனாபட்டி பகுதியை சேர்ந்தவர் அசேன்.. 36 வயதாகிறது. இவர் ஒரு லாரிடிரைவர்.. மனைவி பெயர் நிஷா (எ) பாத்திமா... இவர்கள் 2 பேருமே காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.. கல்யாணமாகி 6 வருடமாகிறது. தவுலத்(6) சபானா(2) என்று இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

தம்பதி: ஆனால், தம்பதிகளிடம் கருத்து வேறுபாடு காரணமாக, நிறைய தகராறுகள் வெடித்தன.. அடிக்கடி இவர்களுக்குள் சண்டை வந்துபோயுள்ளது. எனவே, குடும்பத்தினர் 2 பேரையுமே சமாதானம் செய்துவைத்தனர்.
இந்நிலையில், கடந்த 1-ந் தேதி அசேன் வீட்டில் சுயநினைவு இல்லாமல் விழுந்து கிடந்தார்... 108 ஆம்புலன்சு ஊழியர்கள் விரைந்து வந்து, அசேனை பரிசோதித்து பார்த்துவிட்டு, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள். இதையடுத்து, எடப்பாடி போலீசார் இது தொடர்பான விசாரணையை கையில் எடுத்தனர்..
கிடுக்கிப்பிடி: முதல் கிடுக்கிப்பிடி விசாரணையே, மனைவி நிஷாவிடம்தான் ஆரம்பித்தனர்.. ஆரம்பத்திலேயே உளறி கொட்டினார்.. முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவும், போலீசார் தங்கள் பாணி விசாரணையை துவங்கினர். அப்போதுதான், தன்னுடைய அம்மா ரஜியா, சித்தி சகிராபானு ஆகியோருடன் சேர்ந்து, கணவனை கொன்றதாக கூறினார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொன்னதாவது:
அசேனுக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் இருக்கிறது.. தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்திருக்கிறார்.. தினம், தினம் கணவர் செய்யும் டார்ச்சரை சகித்துக்கொண்டு வாழ்வதை விட, தீர்த்துக்கட்டு நிம்மதியாக வாழலாம் என்று நிஷா ஏற்கனவே முடிவு செய்து வைத்திருந்ததாக தெரிகிறது.
தகராறு: வழக்கம்போல், சம்பவத்தன்றும் தம்பதிக்குள் தகராறு வந்துள்ளது.. நிஷாவை சரமாரியாக தாக்கியிருக்கிறார் அசேன்.. இதைப்பார்த்ததும், நிஷாவின் அம்மா பதறிப்போய் அசேனை தடுக்க முயன்றார். ஆனால், மாமியாருக்கும் சேர்ந்தே உதை விழுந்தது.. இதனால், அங்கிருந்த நிஷாவின் சித்தி சகிராபானு அதிர்ச்சி அடைந்தார்.. இதற்கு பொறுமையிழந்த 3 பெண்களும், பதிலுக்கு அசேனை திருப்பி தாக்கி துவங்கினார்கள்..
தாய், சித்தி, மனைவி 3 பேரும் சேர்ந்து அசேன் கழுத்தை சேலையால் இறுக்கியதாக தெரிகிறது.. இதில் துடிதுடித்தே அசேன் பரிதாபமாக இறந்தார்.. ஆனால், அசேன் மயங்கிவிட்டதாக நினைத்த இந்த பெண்கள், ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளார்கள்.. பேச்சுமூச்சு இல்லாமல் விழுந்து கிடப்பதாக சொல்லி உள்ளார்கள். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்துபார்த்தபோதுதான், அசேன் இறந்ததை உறுதிசெய்தனர். இப்போது 3 பெண்களுமே கைதாகி ஜெயிலில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications