சேலம் சிறை வார்டர் சுப்பிரமணியம்.. மாமியாரின் ‘ஜி.பே.' மூலம் தான் எல்லாமே.. சிக்கியது எப்படி?
சேலம்: சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டர் சுப்பிரமணியம் பணியாற்றி வருகிறார். இவர் மாமியாரின் 'ஜி.பே' மூலம் கைதிகளிடம் பணம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து சிறை வார்டர் சுப்பிரமணியம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, பாளையங்கோட்டை, திருச்சி, வேலூர், கடலூர் ஆகிய இடங்களில் மத்திய சிறை சாலைகள் உள்ளன. இதில் சேலம் மத்திய சிறையானது கி.பி. 1862ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது ஆகும். இந்த சேலம் மத்திய சிறைச்சாலை 113.19 ஏக்கர் பரப்பளவைக் கொண்டதாகும். இந்தச் சிறையில் மொத்தம் 1432 தனி அறைகள் உள்ளது. இங்கு 700 கைதிகளை அடைத்து வைக்கும் அளவுக்கு இட வசதி இருக்கிறது. அனல் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1200க்கு மேற்பட்ட கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆங்கிலேய அரசு இந்திய விடுதலை போராட்ட வீரர்களை கைது செய்து நீண்ட காலம் சிறைவைக்க சேலம் மத்திய சிறையை பயன்படுத்தி வந்தது. இச்சிறையில், சேலம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களான நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கைதிகளையும் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல கோவை, ஈரோடு, உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த கைதிகளும் இங்கு அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
சேலம் மத்திய சிறையில் சிறை கைதிகள் மூலம் லட்டு, மிக்சர், பிஸ்கட், பன் உள்ளிட்ட தின்பண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து, கைதிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், மெயின் ரோட்டோரம் சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து பொதுமக்களுக்கும் தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கைதிகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியில் சேலம் சிறை வார்டர் சுப்பிரமணியம் (வயது 34) என்பவர் பணியாற்றி வந்தார்.
சேலம் சிறையில் கைதிகளுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களுக்குரிய பணத்தை சிறை வார்டர் சுப்பிரமணியம் சிறை கணக்கில் வரவு வைக்க வேண்டும். ஆனால் அந்த பணம் சிறை கணக்கிற்கு சிறை வார்டர் சுப்பிரமணியம் சரியாக வரவில்லை என புகார் எழுந்தது. இதனால் சுப்பிரமணியம் மீது சிறை நிர்வாகத்திற்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கிய கைதிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது பொருட்கள் வாங்கியதற்கு 'ஜி.பே.' மூலம் பணம் அனுப்பி வருகிறோம் என்று தெரிவித்தார்கள். இதையடுத்து அந்த 'ஜி.பே.' அக்கவுண்ட் யாருடையது என்று அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அந்த செல்போன் எண் சிறை வார்டர் சுப்பிரமணியத்தின் மாமியாரின் செல்போன் எண் என்பது தெரிந்தது. அதன்படி கடந்த ஒரு ஆண்டாக ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் அவருடைய மாமியாரின் செல்போன் எண் மூலமாக 'ஜி.பே.' அக்கவுண்டுக்கு சென்றிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து சிறை வார்டர் சுப்பிரமணியத்திடம் சிறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் பணம் மோசடி செய்து இருப்பது தெரிந்தது. இதையடுத்து சேலம் சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத், சிறை வார்டர் சுப்பிரமணியத்தை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கடந்த மாதம் தான் முறைகேடு புகார் காரணமாக இரண்டு காவலர்கள் சேலம் சிறையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications