சேலம் கல்வராயன் மலை டூ மெட்ராஸ் ஐஐடி.. அரசு பள்ளி மாணவி ராஜேஸ்வரி சாதித்தது எப்படி? உருக்கமான தகவல்
சேலம்: பட்டாம்பூச்சிக்கள் எங்கிருந்தாலும் அது பறக்கத்தான் செய்யும். அதுபோல் படிக்கும் குழந்தை எங்கிருந்தாலும் மேலே வந்துவிடும் என்பதற்கு ராஜேஸ்வரி உதாரணமாகும். அகில இந்திய அளவில் 417-வது தரவரிசையை பிடித்த சேலம் கல்வராயன் மலை கருமந்துறையில் உள்ள பழங்குடியின மாணவி ராஜேஸ்வரிக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் இடம் கிடைத்துள்ளது. கல்வராயன் மலையில் உள்ள குக்கிராமத்தில் இருந்து இந்தியாவின் நம்பர் ஒன் பல்கலைக்கழகமான மெட்ராஸ் ஐஐடியில் அரசு பள்ளி மாணவி சேர உள்ளதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
படிப்பை மட்டும் விட்டுவிடவே கூடாது என்பதில் நம்முடைய மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.இதுவரை ஆண்டு வரும், அதிமுக, திமுக என எந்த அரசாக இருந்தாலும் கல்வியை தூக்கி பிடிப்பதிலும், எல்லாரும் படித்து மேலே வர வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டின. அதன்விளைவாக ஏழை மாணவ மாணவிகள் பலர் இன்று படித்து நல்ல வேலையில் இருக்கிறார்கள். ஒரு தலைமுறையே படித்த தலைமுறையாக மாறிவிட்டது. படித்து முன்னேறி வரும் தலைமுறையாக மாறிவருகிறது தமிழ்நாடு. தமிழ்நாட்டில் படிக்காமல் இடை நிற்றல் என்பது அபூர்வமாகி வருகிறது.

அரசின் திட்டங்கள்
ஏழை மாணவ மாணவிகளுக்கு அந்த அளவிற்கு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழை மாணவ மாணவிகள் படிக்க மாதம் 1000 உதவி தொகை, முதல் தலைமுறை பட்டதாரி என்றால் சலுகை, ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள், படித்த உடன் பயிற்சி பெற நான் முதல்வன் திட்டம், உயர்கல்வி பயில பயிற்சி, ஐஏஏஸ் ஐபிஎஸ் தேர்வுக்கு பயிற்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி என மாணவ மாணவிகள் முன்னேற அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனால் நல்ல மாற்றங்கள் நடந்து வருகிறது. சேலம் கல்வராயன் மலை மாணவி ராஜேஸ்வரி மெட்ராஸ் ஐஐடியில் சேரப்போகிறார். அவர் எப்படி சாதித்தார் என்பதை பார்ப்போம்.
3 மகள்கள்
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது கல்வராயன் மலை. ஏழை எளிய மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்குள்ள குக்கிராமமான கருமந்துறையில் வசிப்பவர் பழங்குடியினத்தை சேர்ந்த தையல் தொழிலாளி ஆண்டி. இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி, பரமேஸ்வரி ஆகிய 3 மகள்களும், ஸ்ரீகணேஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். மூத்த மகள் ஜெகதீஸ்வரி சங்ககிரியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்து சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த ஆண்டு திடீரென ஆண்டி இறந்து விட்டார்.
ஐஐடியில் சேர ஆசை
இதையடுத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்த அவருடைய மகன் ஸ்ரீகணேஷ் தந்தை செய்து வந்த தையல் தொழிலை செய்கிறார். 2-வது மகள் ராஜேஸ்வரி கருமந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு பின்னர் கருமந்துறையில் உள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் 9-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கிறார். மாணவி ராஜேஸ்வரி 10-ம்வகுப்பு தேர்வில் 438 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு தேர்வில் 521 மதிப்பெண்களும் பெற்றிருந்தார். மாணவி ராஜேஸ்வரி ஐஐடி உள்ளிட்ட பெரிய கல்லூரிகளில் இன்ஜினியரிங் படிக்க விரும்பினார்.
417வது இடம்
இதற்காக ராஜேஸ்வரி பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இந்த தேர்வில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார். இதையடுத்து ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டி.யில் சேர இடம் கிடைத்திருக்கிறது. கல்வராயன் மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டி.யில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றிருக்கிறார். அரசு பள்ளியில் படித்து இன்று ஐஐடியில் சேரும் ராஜேஸ்வரிக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
முதல்வர் முடிவு
இதனிடையே அரசு பள்ளியில் படித்து ஐ.ஐ.டி.யில் சேரும் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரியின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று நேற்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,"தந்தையை இழந்தாலும், அவர் கனவை தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிட பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் 'சல்யூட்'. அவரது உயர்கல்வி செலவு மொத்தத்தையும், அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன். ராஜேஷ்வரி போன்ற நமது மகள் மேலும் பலர் சேருவதுதான் ஐ.ஐ.டி.க்கு உண்மையான பெருமையாக அமையும். அதற்காக நமது திராவிட மாடல் அரசு தொடர்ந்து உழைக்கும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications