கணவர் வேண்டாம்.. காதலன்தான் வேண்டும்..சேலம் ஓமலூரில் அடம் பிடித்த பிரியா! திடீரென அங்கே நடந்த காட்சி
சேலம்: கள்ளக்காதல் அட்டகாசங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் குடும்பங்கள் பிரிந்து, இறுதியில் நடுத்தெருவுக்கு நிற்கும் நிலைமை பெருகிவிடுகிறது. சேலத்தில் இளம்பெண் எடுத்த முடிவு, இரு குடும்பத்தினரையுமே நிலைகுலைய வைத்துவிட்டது. என்ன நடந்தது ஓமலூர் ஸ்டேஷனில்?
சேலம் மாவட்டம் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு காதல் ஜோடி ஒன்று பதற்றத்துடன் வந்துள்ளனர்.. தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டதால், இரு குடும்பத்தினாராலும் தங்களுக்கு ஆபத்து உள்ளதாகவும், எனவே பாதுகாப்பு தருமாறும் போலீசாரிடம் கேட்டுக் கொண்டனர்.

போலீசார் விசாரணை
இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது அந்த பெண்ணின் பெயர் பிரிய, காதலர் பெயர் ஹரிகிருஷ்ணன் என்பது தெரியவந்தது.. அவர்களிடம் விசாரணை மேற்கொண்டிருந்தபோதே, அந்த பெண்ணின் பெற்றோர் தரப்பிலும், அந்த இளைஞர் தரப்பிலும் திரண்டு ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்கள்..
அதில் ஒருவர் போலீசாரிடம், நான்தான் அந்த பெண்ணின் தாலி கட்டிய கணவர் என்று கூறினார்.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான், இந்த சம்பவத்தின் உண்மை வெளியே வந்தது.
பிரியா - ராமு காதல் திருமணம்
அதாவது, 4 வருடங்களுக்கு முன்பு ராமு என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார் பிரியா.. இப்போது ராமுவுக்கு 30 வயதாகிறது.. ஓமலூர் அருகே கொங்குபட்டி பகுதியை சேர்ந்தவர்தான் இவரது.. சின்ன திருப்பதியில் துணிக்கடை வைத்திருக்கிறார்.. இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை..
தன்னுடைய கணவர் துணிக்கடை வைத்திருந்தும்கூட, மற்றொரு துணிக்கடையில் வேலைக்கு சென்றுள்ளர் இளம்பெண்.. அபபோது சிமெண்டு விற்பனை கடையில் வேலை பார்க்கும் 25 வயது நபர் ஹரிஷ்குமாருடன் தொடர்பு ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது.
ஊட்டியில் தாலி கட்டினார்
ஒருகட்டத்தில் கள்ளக்காதலர் ஹரிஷ்குமாரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த பிரியா, கடந்த வாரம் விட்டு வெளியேறியிருக்கிறார். கள்ளக்காதலனை ஊட்டிக்கு அழைத்து சென்று, கோவிலில் தாலியும் கட்டிக் கொண்டுள்ளார். பிறகு, கணவர் தங்களை பிரித்துவிடுவாரோ என்று பயந்து கொண்டு, போலீசில் தஞ்சம் அடைந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கணவருடன் சென்று குடும்பம் நடத்துமாறு அறிவுறுத்தினர்கள்.. ஆனால், பிரியா, கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என்று பிடிவாதம் பிடித்தார்.. கணவரை விவாகரத்து செய்யாமல், இப்படி திருமணம்செய்வது தவறு என்று என்று போலீசார் அறிவுறுத்தியதுடன், பெற்றோருடன் செல்லுங்கள் என்று கூறினார்கள்..
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல், பெற்றோருடன் செல்ல விருப்பமின்றி சம்மதித்தார் பிரியா. பெற்றோருடன் பிரியாவை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ஓமலூர் ஸ்டேஷனில் பரபரப்பை தந்துவிட்டது
ஓமலூர் ஸ்டேஷன்
முன்னதாக, போலீசில் பிரியா தாலி கட்டி கொண்டு நிற்பதை பார்த்ததுமே, அதிர்ச்சியடைந்த ராமுவும், அவரது உறவினர்கள், பிரியாவை தாக்க முயன்றனர். ஆனால் அவர்களை மகளிர் போலீசார் தடுத்து வெளியேற்றினர். ஆனால், வெளியில் நின்று கொண்டிருந்த ஹரிஷ்குமாரை வீட்டாரை சரமாரியாக தாக்கினார்கள்..
போலீசார் பிரியாவிடம் தனிப்பட்ட விசாரணை நடத்தினார்கள்.. அப்போது, "திருமணமாகி 3 வருடங்களாக கணவர் ராமு, என்னுடன் குடும்பம் நடத்தவில்லை. அதனால், எனது வாழ்க்கையை நானே தேர்வு செய்து கொண்டேன். என்னை காதல் கணவர் ஹரிஷ்குமாருடன் அனுப்பி வைக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மற்றொருபக்கம் கணவர் ராமு தன்னுடன் மனைவியை அனுப்புங்கள் என்று போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.. இவர்களிடம் போலீசார் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.. அதற்கு பிறகுதான், பெற்றோருடன் செல்கிறேன் என்று அரைமனதுடன் சொல்லி உள்ளார் பிரியா.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications