ரூ.30,000 சம்பளம்.. 8 முதல் டிகிரி, என்ஜினீயரிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு.. சேலம் OSC-யில் வேலை

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் ஒன் ஸ்டாப் சென்டரில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு, டிகிரி, என்ஜினீயரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்வதன் மூலம் ரூ.30 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் பணியை பெற முடியும்.

சமூக நலத்துறையின் கீழ் சமூக நலன் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பிரிவில் ‛ஒன் ஸ்டாப் சென்டர்' இயங்கி வருகிறது. பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த ‛ஒன் ஸ்டாப் சென்டர்' இயங்கி வருகிறது.

 Salem one stop center recruitment 2023 for various post including IT Admin

இந்நிலையில் தான் சேலம் மாவட்டத்தில் ‛ஒன் ஸ்டாப் சென்டரில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:

சென்டர் அட்மினிஸ்ட்ரேஷன்: சேலம் ஒன் ஸ்டாப் சென்டரில் சென்டர் அட்மினிஸ்ட்ரேஷன் பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு எம்எஸ்டபிள்யூ (கவுன்சிலிங் சைக்காலஜி) சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் முதுகாலைப்பட்ட படிப்பை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 23 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைதடுக்கும் அரசு/தனியார் நிறுவனங்களில் உளவியல் சார்ந்த ஆலோசகராக 4 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

சீனியர் ஆலோசகர்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஊதியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எம்எஸ்டபிள்யூ (கவுன்சிலிங் சைக்காலஜி) சமூகப்பணி மற்றும் உளவியல் பாடப்பிரிவில் முதுகாலைப்பட்ட படிப்பை பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 23 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைதடுக்கும் அரசு/தனியார் நிறுவனங்களில் உளவியல் ஆலோசகராக 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஐடி அட்மின்: இந்த பணிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஎஸ்சி, பிஇ படிப்பை கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் முடித்திருக்க வேண்டும். விண்ணப்பத்தாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மாதசம்பளமாக ரூ18 ஆயிரம் வழங்கப்படும்.

கேஸ் வொர்க்கர்: இந்த பணிக்கு 6 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். பிஎஸ்டபிள்யூ/எம்எஸ்டபிள்யூ(கவுன்சிலிலிங் சைக்காலஜி) சமூகப்பணி மற்றும் உறவியல் பாடப்பிரிவில் இளங்கலை அல்லது முதுகலை படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பம் செய்வோர் 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் அரசு/தனியார் நிறுவனங்களில் உளவில் ஆலோசகராக 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும். இந்த பணிக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். மாதசம்பளமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.

காவலர்: இந்த பணிக்கு 2 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 8 ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு முடித்து 21 வயது முதல் 40 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். 2 ஆண்டு பணி அனுபவம் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.

மல்டிபர்பஸ் ஹெல்பர்: இந்த பணிக்கு 3 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 21 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள 8 ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு முடித்து சமையல் தெரிந்த பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். மாதசம்பளமாக ரூ.6,400 வழங்கப்படும் என அதிகார்பபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி: இந்த அனைத்து பணிகளுக்கும் விண்ணப்பம் செய்வோர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பணிக்கு தேர்வாகும் நபர்கள் சுழற்சி முறையில் 24 மணிநேரமும் பணி செய்ய தயாராக இருக்க வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் நவம்பர் 8 ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம், அறை எண்: 126, சேலம் 636 001 என்ற முகவரியில் பெற்று பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களுடன் வழங்கலாம்.

பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+