சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஃபைன் மட்டும் போடறீங்க.. ரசீது எங்கே.. பைக்கில் வந்தவர் வாக்குவாதம்.. வைரலான வீடியோ.. எஸ்ஐ சஸ்பெண்ட்

சேலத்தில் போலீஸ் எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஃபைன் மட்டும் போடறீங்க.. ரசீது எங்கே.. வைரலான வீடியோ.. எஸ்ஐ சஸ்பெண்ட்

    சேலம்: "ஸ்பாட் ஃபைன் மட்டும் போடறீங்க.. ரசீது எங்கே.." என்று பைக்கில் வந்தவர் எஸ்ஐ கோவிந்தராஜிடம் கேட்டு நடுரோட்டில் சண்டை போட்டுள்ளார்.. இந்த வீடியோ வைரலானதை அடுத்து கோவிந்தராஜை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
    டிராபிக் விதிகளை மீறுபவர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் போடும் ஸ்பாட் ஃபைன் விதிக்கும் திட்டம் அமலில் உள்ளது.. அதனால், லைசென்ஸ் இல்லாமலும் ஹெல்மெட் அணியாமலும் வண்டி ஓட்டுபவர்கள் இதனால் ஃபைன் கட்டி வருகிறார்கள்.

    இப்படி ஃபைன் கட்டினால், அதற்கு உரிய ரசீதினை போலீசார், உடனடியாக தந்துவிடுவார்கள்.. ஆனால், சேலத்தில் ஒரு போலீஸ்காரர் ஸ்பாட் ஃபைன் போட்டு, அதில் தில்லுமுல்லு செய்துள்ளார்.

    கார்த்திகை பவுர்ணமியில் விஸ்வரூப தரிசனம் அளித்த திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்கார்த்திகை பவுர்ணமியில் விஸ்வரூப தரிசனம் அளித்த திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர்

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    அந்த எஸ்ஐ பெயர் கோவிந்தராஜ்.. வழக்கம்போல் சுந்தர் லாட்ஜ் பஸ் ஸ்டேண்ட் அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஹெல்மட் போடாமல் ஒருவர் வந்துள்ளார்.. அவரை மடக்கி பிடித்த கோவிந்தராஜ், 200 ரூபாய் ஸ்பாட் ஃபைன் போட்டார்.. இதனால் பைக்கில் வந்தவருக்கும், கோவிந்தராஜுக்கும் தகராறு ஏற்பட்டது..

    சண்டை

    சண்டை

    இறுதியில் அபராத பணத்தை அந்த நபர் கட்டிவிட்டார்.. ஆனால், கோவிந்தராஜ் ரசீது தரவில்லையாம்.. பிறகு சிறிது நேரம் கழித்து ரசீது தந்துள்ளார்.. ஆனால் அதில் பணம் வாங்கி கொண்டதாக தகவலே இல்லையாம்..இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர் திரும்பவும் கோவிந்தராஜிடம் சண்டை போட்டுள்ளார்.

     செல்போன்

    செல்போன்

    இவர்கள் இருவரும் ரொம்ப நேரமாக நடுரோட்டில் சண்டை போடுவதை ஒருவர் செல்போனில் வீடியோவும் எடுத்து, இணையத்தில் போட்டுவிட்டார். இந்த வீடியோ படு வைரலானதையடுத்து, உயரதிகாரிகளின் கவனத்துக்கு போனது. கோவிந்தராஜ் தந்த ரசீதில் முறையான பதிவு செய்யப்படவில்லை என்பது ஊர்ஜிதமானது.

     அறிவுறுத்தல்

    அறிவுறுத்தல்

    இதையடுத்து, எஸ்ஐ கோவிந்தராஜை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். குறிப்பிட்ட தொகைக்கு மேல் கூடுதலாக ஃபைன் போடக்கூடாது என்றும், அதற்குரிய ரசீது உடனடியாக தரப்பட வேண்டும் என்றும் கமிஷனர் அறிவுறுத்தி இருக்கிறார்.

    English summary
    police sub inspector govindaraj suspended for traffic rules penalty near salem
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X